Neeraj Chopra: நீரஜ் சோப்ராவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு! அதிகரிக்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..?

Lieutenant Colonel Neeraj Chopra Salary: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரது சம்பளம் ரூ.1,21,200 முதல் ரூ.2,12,400 வரை உயரும். இந்திய ராணுவத்தில் அவர் வகிக்கும் பதவி, ஒலிம்பிக்கில் அவர் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களுக்கான அங்கீகாரமாகும். நீரஜ் சோப்ராவின் நிகர மதிப்பு ரூ.37 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Neeraj Chopra: நீரஜ் சோப்ராவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு! அதிகரிக்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..?

நீரஜ் சோப்ரா

Published: 

15 May 2025 08:00 AM

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற நீரஜ் சோப்ராவுக்கு (Neeraj Chopra), பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் (Lieutenant Colonel) பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த சிறப்பு கௌரவத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். முன்னதாக, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக பிறகு, இந்திய ராணுவத்தில் பதவி உயர்வு பெற்றது மட்டுமின்றி, அவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. இந்தநிலையில், நீரஜ் சோப்ரா பதவி உயர்வு பெற்றபிறகும் அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

லெப்டினன்ட் கர்னல் ஆன பிறகு நீரஜூக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லெப்டினன்ட் கர்னலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் இருந்து மிக அதிகமான சம்பளத்தைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, நீரஜ் சோப்ரா போட்டியில் பங்கேற்கு வெற்றிபெறும்போது கிடைக்கும் பரிசுத்தொகை, மத்திய விளையாட்டு துறையிடம் இருந்து கிடைக்கும் ஊக்கத்தொகையும் அவரது பொருளாதாரத்தை உயர்த்தலாம். இந்திய பாதுகாப்பு அகாடமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் ரூ.1,21,200 முதல் ரூ.2,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.  இந்திய ராணுவத்தின் இந்த சம்பள அமைப்பு 7வது சம்பளக் குழுவின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தங்க மகன் நீரஜ் சோப்ரா இந்திய இராணுவத்திடம் இருந்து மாதம் 1,21,200 முதல் ரூ.2,12,400க்குள் பெறலாம்.

நீரஜ் சோப்ராவின் நிகர மதிப்பு என்ன..?

நீரஜ் சோப்ரா இந்தியா மட்டுமின்றி, உலகளவிலும் மிக சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவர். என்டிடிவி ஸ்போர்ட்ஸ் படி, லெப்டினன்ட் கர்னலாக மாறுவதற்கு முன்பு நீரஜ் சோப்ராவின் நிகர மதிப்பு ரூ.37 கோடி என்று தெரிவித்தது. அதாவது, நீரஜ் சோப்ராவின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.4 கோடியே ஆகும். இதை தொடர்ந்து, நீரஜ் சோப்ரா சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்பு மற்றும் விளம்பரங்கள் மூலம் நிறைய பணம் சம்பாதித்து வருகிறார். மேலும், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பிறகு, நீரஜ் சோப்ரா பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று சாதனை:

ஒலிம்பிக் வரலாற்றில் நீரஜ் சோப்ரா இதுவரை இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். அதே நேரத்தில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்று நீரஜ் வரலாறு படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீரஜ் சோப்ரா தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Delhi Capitals: வங்கதேச வீரர் ஐபிஎல்லில் எதற்கு..? டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு..!
Ayush Mhatre: சூர்யகுமார் யாதவ் இதை சொன்னார்..! சிஎஸ்கேவில் இனி என் கிரிக்கெட் வாழ்க்கை.. மனம் திறந்த ஆயுஷ் மத்ரே!
IPL 2025: ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தானால் என்ன நடக்கும்..?
Neeraj Chopra: இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு சிறப்பு கௌரவம்..!
Ravindra Jadeja: 38 மாதங்கள்! 1152 நாட்கள்! ஆல்ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து நம்பர் 1.. புதிய சாதனை படைத்த ஜடேஜா!
IPL 2025 Resumes: ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் சந்தேகம்.. யார் யார் பிளே ஆஃப்களில் விளையாடுகிறார்கள்..? விவரம் இதோ!