IPL 2025 Restart: விரைவில் ஐபிஎல் 2025 புதிய அட்டவணை! அனைத்து அணிகளையும் ஸ்டேடியத்திற்கு வர சொன்ன பிசிசிஐ..

IPL 2025 Resumes: ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 13க்குள் அனைத்து அணிகளும் தங்கள் சொந்த ஸ்டேடியங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், மே 16 முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் போட்டிகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 30க்குள் தொடர் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மட்டும் ஸ்டேடியம் இன்னும் உறுதியாகவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

IPL 2025 Restart: விரைவில் ஐபிஎல் 2025 புதிய அட்டவணை! அனைத்து அணிகளையும் ஸ்டேடியத்திற்கு வர சொன்ன பிசிசிஐ..

ஐபிஎல் 2025 மீண்டும் தொடக்கம்

Published: 

11 May 2025 16:19 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) மீண்டும் தொடங்குவது குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டானது ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து என்றே சொல்லலாம். அதாவது, பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியை தவிர, மீதமுள்ள 9 அணிகளுக்கும் அவர்களது சொந்த ஸ்டேடியத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ளுமாறு பிசிசிஐ (BCCI) அறிவுறுத்தியுள்ளது. புதிய அட்டவணையை தயாரித்து மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிசிசிஐ அனைத்து அணியின் உரிமையாளர்களிடம் வாய்மொழியாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டேடியங்களுக்கு வர சொன்ன பிசிசிஐ:

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக கடந்த 2025 மே 8ம் தேதி முதல் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், ஐபிஎல்லில் பங்கேற்ற பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக சென்று விட்டனர். இருப்பினும், தற்போது வெளிநாடு வீரர்களை மீண்டும் அழைக்க அணி உரிமையாளர்களிடம் பிசிசிஐ கோரியுள்ளது. இதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வருகின்ற 2025 மே 25 அல்லது மே 30ம் தேதிக்குள் ஐபிஎல் 2025 சீசனை முடிக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, வருகின்ற 2025 மே 13ம் தேதிக்குள் அனைத்து அணிகளை சேர்ந்த வீரரக்ளும் தங்களது சொந்த ஸ்டேடியத்திற்கு செல்ல வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஒருநாளைக்கு இரண்டு போட்டிகள்:

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்திகளின்படி, “ வருகின்ற 2025 மே 13ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அவர்களது சொந்த ஸ்டேடியத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மட்டும் தரம்சாலா செல்லாமல், வேறு ஒரு இடத்தை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கான ஸ்டேடியம் மட்டுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முடிந்தவரை ஐபிஎல் 2025 சீசன் 2025 மே 25ம் தேதிக்குள் முடிக்க, பிசிசிஐ ஒரு நாளில் 2 போட்டிகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

ஐபிஎல் தலைவர் சொன்னது என்ன..?

ஐபிஎல் 2025 சீசன் மீண்டும் தொடங்கப்படுவது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறுகையில், “ இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல்லை மீண்டும் தொடங்கி முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதை உடனடியாக ஏற்பாடு செய்ய முடிந்தால், இடம், தேதிகள் மற்றும் பிற ஏற்பாடுகளை நாங்கள் முடிவு செய்ய வேண்டும். மிக முக்கியமாக, நாங்கள் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.