IPL 2025: பிளே ஆஃப் பயத்தில் டெல்லி.. பந்தயத்தில் முந்துமா பஞ்சாப்..? வானிலை எப்படி..?

Punjab Kings vs Delhi Capitals: ஐபிஎல் 2025ன் 58வது போட்டியில், மே 8 அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் மோதுகின்றன. பஞ்சாப் 15 புள்ளிகளுடனும், டெல்லி 13 புள்ளிகளுடனும் பிளேஆஃப் தகுதிக்காக போராடுகின்றன. தர்மசாலா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. வானிலை மழையாக இருக்கலாம். இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் மற்றும் ஹெட்-டு-ஹெட் விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

IPL 2025: பிளே ஆஃப் பயத்தில் டெல்லி.. பந்தயத்தில் முந்துமா பஞ்சாப்..? வானிலை எப்படி..?

பஞ்சாப் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ்

Published: 

08 May 2025 08:00 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 58வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 8ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பிளேஆஃப்களுக்கு தகுதி பெற இரு அணிகளும் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். தர்மசாலாவின் பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் மற்றும் வானிலை எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

தர்மசாலா பிட்ச் ரிப்போர்ட்:

தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தின் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது. இந்த பிட்சில் அதிக பவுன்ஸ் இருக்கும் என்பதால், பந்து பேட்டிற்கு நன்றாக வரும். இது தவிர, ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கிறது. இது மிகச் சிறிய மைதானம், இதனால் அதிக ஸ்கோரிங் போட்டிகளை எதிர்பார்க்கலாம்.

தர்மசாலாவில் இதுவரை 13 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன,. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 8 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பஞ்சாப் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 241 ரன்கள் அடித்துள்ளது.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக பஞ்சாப் 177 போட்டிகளிலும், டெல்லி அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இரு அணிகளுக்கும் சிறந்த பார்மில் உள்ளதால், சுவாரஸ்யமான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை எப்படி..?

தர்மசாலாவில் நடைபெறும் போட்டியின் போது மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்பநிலை 16 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, 71 சதவீத ஈரப்பதமும் இருக்கலாம்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

டெல்லி கேபிடல்ஸ்:

ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், டி நடராஜன்