IPL 2025 Playoffs Race: பிளே ஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி..? எந்த அணிக்கு வாய்ப்புகள் அதிகம்..?

Mumbai Indians vs Delhi Capitals: ஐபிஎல் 2025 இல், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் கடைசி பிளே ஆஃப் இடத்திற்காக போட்டியிடுகின்றன. இரு அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. மே 21ம் தேதி நடைபெறும் நேரடி மோதல் இறுதித் தீர்மானத்தை அளிக்கும். வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம். மும்பை 14 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், டெல்லி 13 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது.

IPL 2025 Playoffs Race: பிளே ஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி..? எந்த அணிக்கு வாய்ப்புகள் அதிகம்..?

மும்பை இந்தியன்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ்

Published: 

20 May 2025 16:37 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 61வது போட்டியில் 2025 மே 19ம் தேதியான நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்ததன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப்களுக்கு செல்லும் கனவு முடிவுக்கு வந்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறியது. ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சென்றது. அதேநேரத்தில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிகள் போட்டியிட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளது. அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப்க்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

புள்ளிப்பட்டியலில் மும்பை, டெல்லி எங்கே உள்ளது..?

ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி இதேபோல், 12 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் லீக் ஸ்டேஜில் தலா 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த 2 போட்டிகளில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறதோ அந்த அணி பிளே ஆஃப்க்குள் செல்லும்.

மே 21ம் தேதி முக்கிய போட்டி:

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் யார் பிளே ஆஃப்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற கேள்விக்கு விடையானது 2025 மே 21ம் தேதியான நாளை மிகவும் முக்கியமானது. இந்த நாளில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்குநேர் மோதுகின்றன. இந்த போட்டியில் எப்படியும் ஒரு அணிக்கு வெற்றியும், ஒரு அணிக்கு தோல்வியும் நிச்சயம். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்புகள் அதிகம். முன்னதாக, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இந்தநிலையில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பழிவாங்க டெல்லி கேபிடல்ஸ் அணி முயற்சிக்கும். அப்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி பழிவாங்கினால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆஃப் முன்னேற்றக் கதை இங்கேயே நின்றுவிடும்.

பிளே ஆஃப் சமன்பாடு..?

பிளே ஆஃப் சமன்பாட்டின்படி, டெல்லி கேபிடல்ஸ் அணியாக இருந்தாலும் சரி, மும்பை இந்தியன்ஸ் அணியாக இருந்தாலும் சரி, இரண்டு அணிகளும் மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், 2025 மே 21ம் தேதி இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மோதலுக்கு பிறகு, இரு அணிகளும் தங்களது கடைசி லீக் ஸ்டேஜ் போட்டியில் ஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸின் சவாலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை.