IPL 2025 Final: கொல்கத்தா டூ அகமதாபாத்! பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!

Ahmedabad Hosts IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் மே 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நியூ சண்டிகரில் நடைபெறும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

IPL 2025 Final: கொல்கத்தா டூ அகமதாபாத்! பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்

Published: 

20 May 2025 19:33 PM

ஐபிஎல் 2025ம் (IPL 2025) இறுதிப்போட்டி வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி (Ahmedabad Narendra Modi Stadium) ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த முடிவை இன்று அதாவது 2025 மே 20ம் தேதி நடைபெற்ற நீண்ட கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ (BCCI) இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல், ஐபிஎல் 2025ன் முதல் தகுதிச் சுற்று போட்டியும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 2025 ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, ஐபிஎல் 2025ன் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பற்றிய அப்டேட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

குவாலிஃபையர்-1, எலிமினேட்டர் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது..?

ஐபிஎல் 2025ல் இதுவரை 61 போட்டிகள் நடைபெற்றுள்ளது. லீக் ஸ்டேஜில் இன்னும் 9 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவுகிறது. பிளே ஆஃப் பந்தயத்தை கருத்தில் கொண்டு, இந்த போட்டிகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை.

ஐபிஎல் 2025ன் முதல் தகுதிச் சுற்று போட்டி 2025 மே 29ம் தேதி நியூ சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெறவுள்ளது. அதைதொடர்ந்து, 2025 மே 30ம் தேதி நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் நடைபெற இருக்கிறது. இருப்பினும், இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக மழைக்காலம் தொடங்கி வருவதால், வானிலையை கருத்தில் கொண்டு பிசிசிஐ இந்த இடங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால்தான் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்துக்கு முன்பு இறுதிப்போட்டி எங்கு திட்டமிடப்பட்டது..?

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி முன்னதாக கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக, ஐபிஎல் 2025 ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, ஐபிஎல் 2025ன் இறுதிப்போட்டி 2025 மே 25ம் தேதியிலிருந்து 2025 ஜூன் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டி 2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.