IPL 2025 Playoffs: தொடர் வெற்றி! பிளே ஆஃப்க்குள் கால் வைத்த மும்பை.. டாப் 2க்கு அடித்துக்கொள்ளும் அணிகள்!

Top 4 IPL Teams: மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2025 இல் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால், முதல் நான்கு அணிகளில் இடம் பிடித்தது. ஆனால், டாப் 2 இடங்களுக்கான போட்டி இன்னும் சவாலானதாக உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றில் இன்னும் 2 போட்டிகள் விளையாட உள்ளன. இறுதிப் போட்டிகளின் விளைவு டாப் 2 இடங்களை தீர்மானிக்கும்.

IPL 2025 Playoffs: தொடர் வெற்றி! பிளே ஆஃப்க்குள் கால் வைத்த மும்பை.. டாப் 2க்கு அடித்துக்கொள்ளும் அணிகள்!

சுப்மன் கில் - ஷ்ரேயாஸ் ஐயர் - ரஜத் படிதார் - ஹர்திக் பாண்ட்யா

Published: 

22 May 2025 11:20 AM

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, ஐபிஎல் 2025ன் (IPL 2025) 63வது போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், ஐபிஎல்லின் 18வது சீசனில் பிளே ஆஃப் தகுதி பெற்று 4வது அணியாக உள்ளே நுழைந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெறுவதற்கு முன், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நுழைந்திருந்தது. 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருந்தாலும், எந்த அணி யாருடன் மோத போகிறது என்ற அட்டவணை இன்னும் தெளிவாகவில்லை. இதற்கான காரணம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் 2 இடங்களை தக்க வைக்க போராட்டம்:

4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு லீக் ஸ்டேஜில் தலா 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் போட்டி முடிந்திருந்தாலும், புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களுக்கான போர் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மும்பை அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்று அதிகபட்சமாக 18 புள்ளிகளுடன் டாப் 2க்குள் நுழைய முயற்சிக்கும். அதேநேரத்தில், குஜராத் அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று 22 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைக்க விரும்பும். பஞ்சாப் மற்றும் பெங்களூரை பொறுத்தவரை அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று 21 புள்ளிகளுடன் டாப் 2க்குள் வர முயற்சிக்கலாம். அதன்படி, இந்த அணிகள் விளையாடும் அடுத்த போட்டிகளும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி:

டாப் 2 யார்..?

ஐபிஎல் 2025 சீசனின் தற்போதைய புள்ளிகள் பட்டியலில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி அதே 17 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் தகுதிபெற்ற அணிகளின் லீக் போட்டிகளில் விவரம்:

  • 2025 மே 22 – குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • 2025 மே 25 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2025 மே 23 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • 2025 மே 27 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • 2025 மே 24 – பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
  • 2026 மே 26 – மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
Related Stories
India tour of England 2025: இளம் கேப்டன் தலைமையில் களம்.. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு!
IPL 2025: முதலிடத்தை தக்கவைக்க களமிறங்கும் குஜராத்! ஆறுதல் வெற்றிபெறுமா லக்னோ..? பிட்ச் எப்படி?
India vs England Test Series 2025: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்..? வெளியான தேதி விவரம்!
IPL 2025: கிரிக்கெட் போதும்.. புது கேமில் புகுந்து விளையாடிய விராட் – அனுஷ்கா ஜோடி.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
IPL 2025: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மழைக்கு வாய்ப்பு..? டெல்லி அணிக்கு பிளே ஆஃப் ஆப்பா..? இடத்தை மாற்ற கோரிக்கை!
IPL 2025: பிளே ஆஃப்க்குள் 4வது அணியாக நுழைவது யார்..? மும்பை – டெல்லி இன்று பலப்பரீட்சை!