India tour of England 2025: இளம் கேப்டன் தலைமையில் களம்.. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு!
India U19 Tour of England 2025: பிசிசிஐ, 2025 ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய U19 அணியை அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025ல் சிறப்பாக விளையாடிய ஆயுஷ் மத்ரே கேப்டனாகவும், வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம் பெற்றுள்ளார். 50 ஓவர் பயிற்சிப் போட்டி, 5 ஒருநாள் போட்டிகள், 2 பல நாள் போட்டிகள் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற உள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் அறிவிப்பும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே
ஐபிஎல் 2025 (IPL 2025) முடிந்த கையோடு இந்திய வீரர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் (India tour of England 2025) மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்லது. இதனுடன், இந்திய அண்டர் 19 அணியும் (India U19 squad) வருகின்ற 2025 ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதற்கான இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியை பிசிசிஐ இன்று அதாவது 2025 மே 22ம் தேதி அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 17 வயதே ஆன ஆயுஷ் மத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதே அணியில் ஐபிஎல்லில் 35 பந்துகளில் சதம் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பெற்றுள்ளார்.
அணியை அறிவித்த பிசிசிஐ:
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “வருகின்ற 2025 ஜூன் 24 முதல் ஜூலை 23ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியை ஜூனியர் கிரிக்கெட் குழு தேர்வு செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 50 ஓவர் பயிற்சி போட்டி, அதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 பலநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 அணியின் அட்டவணை:
- 2025 ஜூன் 25 – 50 ஓவர் பயிற்சி போட்டி
- 2025 ஜூன் 27 – முதல் ஒருநாள் போட்டி
- 2025 ஜூன் 30 – 2வது ஒருநாள் போட்டி
- 2025 ஜுலை 2 – 3வது ஒருநாள் போட்டி
- 2025 ஜூலை 5 – 4வது ஒருநாள் போட்டி
- 2025 ஜூலை 7 – 5வது ஒருநாள் போட்டி
- 2025 ஜூலை 12 முதல் 15 வரை – முதல் பல நாள் போட்டி
- 2025 ஜூலை 20 முதல் 23 வரை – 2வது பல நாள் போட்டி
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U19 அணி:
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
India U19 squad for Tour of England announced.
Details 🔽
— BCCI (@BCCI) May 22, 2025
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ் சிங் சாவ்டா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். ஆம்ப்ரிஸ், கனிஷ்க் சவுகான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதாஜித், ரகவ், யுதாஜித், குவாத்ரா எனித், ராணா, அன்மோல்ஜித் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: நமன் புஷ்பக், டி திபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (விக்கெட் கீப்பர்)
இந்திய டெஸ்ட் அணி எப்போது அறிவிக்க வாய்ப்பு..?
இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. இதில், சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஐபிஎல் 2025 2025 பிளேஆஃப் போட்டிகளுக்கு முன்பு பிசிசிஐ அணியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.