IPL 2025: முதலிடத்தை தக்கவைக்க களமிறங்கும் குஜராத்! ஆறுதல் வெற்றிபெறுமா லக்னோ..? பிட்ச் எப்படி?
Gujarat Titans vs Lucknow Super Giants: 2025 மே 22 அன்று அகமதாபாத்தில் நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டிக்கான முன்னோட்டம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் தற்போதைய நிலை, ஹெட்-டு-ஹெட் பதிவு, பிட்ச் ரிப்போர்ட், வானிலை முன்னறிவிப்பு மற்றும் சாத்தியமான பிளேயிங் லெவன் விவரங்கள் இதில் அடங்கும்.

குஜராத் டைட்டன்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்கின் 64வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 22ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் இதுவரை 12 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி, பிளே ஆஃப்களுக்கு முன்னேறியது. அதேநேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளை மட்டுமே பெற்று வெளியேறியது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலாக ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
பிட்ச் ரிப்போர்ட்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் மேற்பரப்பு எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. அதேநேரத்தில், போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் மூலம் தாக்குதல்களை ஏற்படுத்தலாம். நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக கடினமானதாகவும், தட்டையாகவும் இருக்கும், பெரும்பாலான இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
ஹெட் டூ ஹெட்:
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி அதிகபட்சமாக 4 போட்டிகளிலும், லக்னோ அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வானிலை எப்படி..?
அகமதாபாத்தில் போட்டியின் நாளில் மழை பெய்ய 25 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அதிக ரன்கள் குவிக்கலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
இம்பேக்ட் வீரர்: சாய் சுதர்சன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த், வில்லியம் ஓ ரூர்க்
இம்பேக்ட் வீரர்: ஷர்துல் தாக்கூர்