India vs England Test Series 2025: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்..? வெளியான தேதி விவரம்!

India Test Squad 2025: ஐபிஎல் 2025க்குப் பின், இந்திய அணி 2025 ஜூனில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படலாம். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக இருக்கலாம். 18 வீரர்கள் கொண்ட அணியில், கருண் நாயர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

India vs England Test Series 2025: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்..? வெளியான தேதி விவரம்!

இந்திய டெஸ்ட் அணி

Published: 

21 May 2025 18:26 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார்கள். ஐபிஎல் 2025 சீசனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 2025 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், இந்திய அணி (Indian Cricket Team) அறிவிக்கப்படும் தேதியும் இதனுடன், புதிய டெஸ்ட் கேப்டன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிடைத்த தகவலின்படி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு 18 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி 7 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 3 ஆல்ரவுண்டர்கள், ஒரு ஸ்பின்னர் மற்றும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறலாம். ரோஹித் சர்மாவிற்கு பிறகு, புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்படலாம். அதேநேரத்தில், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

இந்திய அணி என்று அறிவிக்கப்பட வாய்ப்பு..?

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வருகின்ற 2025 மே 25ம் தேதி அறிவிக்கப்படலாம். மேலும், புதிய டெஸ்ட் கேப்டனும் அதே நாளில் அறிவிக்கப்படுவார். யார் கேப்டன் பதவியைப் பெறுகிறார்கள், எந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை அறிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், 2018ம் ஆண்டுக்கு பிறகு கருண் நாயர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்பலாம். இது தவிர, ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மாவிற்கு பதிலாக, சாய் சுதர்ஷன் அணியில் மாற்று வீரராக அறிமுகம் ஆகலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், கருண் நாயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் & துணை கேப்டன்), துருவ்  ஜுரேல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஹர்ஷித் ராணா.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை:

முதல் டெஸ்ட் போட்டி- 2025 ஜூன் 20-24 (லீட்ஸ்)
இரண்டாவது டெஸ்ட் போட்டி- 2025 ஜூலை 2-6 (பர்மிங்காம்)
மூன்றாவது டெஸ்ட் போட்டி- 2025 ஜூலை 10-14 (லார்ட்ஸ்)
நான்காவது டெஸ்ட் போட்டி- 2025 ஜூலை 23-27 (மான்செஸ்டர்)
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- 2025 ஜூலை 31-ஆகஸ்ட் 4 (தி ஓவல், லண்டன்)

 

Related Stories
IPL 2025: கிரிக்கெட் போதும்.. புது கேமில் புகுந்து விளையாடிய விராட் – அனுஷ்கா ஜோடி.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
IPL 2025: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மழைக்கு வாய்ப்பு..? டெல்லி அணிக்கு பிளே ஆஃப் ஆப்பா..? இடத்தை மாற்ற கோரிக்கை!
IPL 2025: பிளே ஆஃப்க்குள் 4வது அணியாக நுழைவது யார்..? மும்பை – டெல்லி இன்று பலப்பரீட்சை!
Ayrton Senna: அஜித் முத்தமிட்ட ரேஸர் சிலை.. பந்தயத்தில் பறிபோன கடைசி மூச்சு.. யார் இந்த அயர்டன் சென்னா..?
CSKvMI : தல தோனியின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி – நெகிழ்ச்சி சம்பவம்
IPL 2025 Rules: ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. நெருங்கும் பிளே ஆஃப்.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!