Hanuman: உங்கள் கனவில் அனுமன் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

ஆன்மிகத்தைப் பொறுத்தமட்டில் செவ்வாய்க்கிழமை அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். அனுமனின் அருள் பெறுவதற்கான வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றினால் அவரின் ஆசீகளைப் பெறலாம். அனுமனின் பக்தி, பணிவு, மற்றும் நேர்மை போன்ற குணங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Hanuman: உங்கள் கனவில் அனுமன் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

அனுமன்

Published: 

06 May 2025 17:59 PM

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை என்பது ராமரின் அதி தீவிர பக்தரான அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகப் பார்க்கப்படுகிறது. வாயு பகவானின் மகனான அனுமன், ராமாயணத்தில் ராமரின் நாமம் எங்கெல்லாம் கேட்கப்படுமோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகமாக உள்ளது. நேர்மை, பக்தி, அன்பு, கடமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் அனுமன் கலியுகத்திலும் கூட இருப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அனைத்தும் சைவ மற்றும் வைணவ தலங்களில் அனுமன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஊரிலும் அனுமனுக்கு என தனிக்கோயில்களும் உள்ளது.இப்படியான அனுமன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சிறப்பான செயல்களை செய்வார் என்பது ஐதீகமாக உள்ளது.

அனுமான் இயற்கையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்பவர். அவரின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. அனுமன் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், அவன் ஒருபோதும் தன் சக்தியை பலமாக வெளிக்காட்டுவதில்லை என புராணங்கள் சொல்கிறது. ஆனால் தேவைப்படும் பட்சத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றால் மட்டுமே அனுமனின் பலத்தை நம்மால் காண இயலும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மன உறுதிக் கொண்ட அனுமன்

அதனால் பலரும் அனுமனின் பலம் வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்கள். அவர் நினைத்தால் எதையும் செய்யக்கூடிய மன உறுதிக் கொண்டவர். எப்போதும் பணிவாக இருக்க வேண்டும். நியாயத்தின் பக்கம் நடக்க வேண்டும், கருணை காட்ட வேண்டும் என அனுமன் போதிக்கிறான். நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்தாலும், பணிவாகவும் உண்மையாகவும் இருந்தால், அனுமனின் ஆசீர்வாதம் எப்போது உங்களுடன் இருக்கும் என நம்பப்படுகிறது. இதனை நாம் சில அறிகுறிகள் மூலம் உணர முடியும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக பார்க்கப்படுகிறது. காரணம் இத்தகைய சனி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டுகள் எடுக்கும். சனி பகவான் எந்த ராசியில் இருந்தாலும், மற்ற ராசிக்காரர்களுக்கு அது நேர்மறை அல்லது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அனுமனின் ஆசீர்வாதம் இருந்தால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட தேவையே இல்லை. இதனால் சனி பகவானின் கோபத்திலிருந்து நாம் தப்பிக்கலாம் என நம்பப்படுகிறது. சனி பகவானின் தாக்கம் அனுமனின் பக்தர்களைப் பாதிக்காது என்பது தீராத ஐதீகமாக உள்ளது.

அனுமன் யாருடைய கனவில் தோன்றுகிறாரோ, அவருடைய பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவரின் கனவில் அனுமன் கோயில், பூந்தி, ராமாயண பாராயணம் அல்லது பஜனைக் கீர்த்தனை போன்றவற்றை கண்டால் உங்களைச் சுற்றி அவரின் ஆசீர்வாதம் இருப்பதற்கான ஒரு பெரிய அறிகுறியாக கருதப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)