செவ்வாய் மற்றும் ராகு சாதகம்.. இந்த 6 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி!
2025 ஆம் ஆண்டு இறுதி வரை செவ்வாய் மற்றும் ராகு கிரகங்கள் வலுவாக இருப்பதால், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளுக்கு சாதகமான காலமாக அமையும். விடாமுயற்சி, தைரியம், உறுதிப்பாடு ஆகிய குணங்கள் மேம்படும். தொழில், வணிகம், நிதி நிலைமை மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.

ஜோதிடப்பலன்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் ஜாதகத்திலோ அல்லது கிரக இயக்க நிலையிலோ வலுவாகவும் சாதகமாகவும் இருப்பவைகளாக பார்க்கப்படுகிறது. இதனால் ராசிக்காரர்கள் எந்தவொரு சவால்களையும் அல்லது பிரச்சனைகளையும் சமாளித்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் 2025 ஆம் ஆண்டு இறுதி வரை வலுவாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிகள் விடாமுயற்சி, தைரியம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு பெயர் பெற்றவையாக திகழும். அதுமட்டுமல்லாமல் வேறு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றிப் பார்க்கலாம்.
- மேஷம்: விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் அதீத தன்னம்பிக்கை கொண்டவர்களாக திகழும் இந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் அச்சமற்றவர்களாகவும், எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இதனால் இவர்களின் மேலதிகாரிகள் அவர்களுக்கு அசாதாரண இலக்குகளையோ அல்லது வேலையில் பெரிய திட்டங்களையோ ஒதுக்கினாலும், அவர்கள் அவற்றை திருப்திகரமாகவும் சரியான நேரத்திலும் முடித்து பாராட்டைப் பெறுவார்கள். சரியான முடிவுகள் காரணமாக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் லாபப் பாதையில் செல்லும். வருமானமும் அதிகரிக்கும்.
- மிதுனம்: உள்ளார்ந்த புத்திசாலித்தனம், நேரம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் இந்த ராசிக்காரர்கள் திட்டமிட்ட முறையில் செயல்படுவார்கள். இதன்மூலம் நிதி, தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பார்கள். குடும்பப் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கும் இவர்கள் அவர்கள் வேலையில் பணி அனுபவம் கொண்ட மூத்தவர்களை விடவும் பதவி உயர்வுகளைப் பெறவும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். இவர்கள் தங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் புதிய யோசனைகள் மற்றும் மாற்றங்களை மேற்கொண்டு லாபத்தின் அடிப்படையில் செல்வார்கள். எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் தங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பார்கள்.
- சிம்மம்: இயற்கையான தலைமைத்துவ குணங்கள், அனைவரையும் உள்ளடக்கிய தத்துவம் மற்றும் முன்னேறும் போக்கு ஆகியவற்றைக் கொண்ட இந்த ராசிக்காரர்களை எட்டாவது வீட்டு சனி மட்டுமல்லா ஏழாவது வீட்டில் இருக்கும் ராகுவால் கூட தடுக்க முடியாது. ராசியின் அதிபதியான சூரியன் மற்றும் இந்த ராசிக்கு மிகவும் சாதகமான கிரகமான செவ்வாய் ஆகிய இரண்டும் இந்த ஆண்டு முழுவதும் நல்ல நிலையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே உங்களின் விடாமுயற்சி, தைரியம் மற்றும் முன்முயற்சி பெரிதும் அதிகரிக்கும். நீங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள்.
- துலாம்: லாபத்தின் அதிபதியாக திகழும் சூரியனும், செல்வத்தின் அதிபதியாக திகழும் செவ்வாய்ம் இந்த ராசிக்கு சாதகமான நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை சிறிய முயற்சியுடன் முழுமையாக சமாளிக்கக்கூடிய திறமைகளைப் பெறுவார்கள். அதிக அளவிலான தொலைநோக்கு பார்வை, அடக்கம் மற்றும் லாப நஷ்டங்களை சமநிலைப்படுத்தும் தத்துவம் ஆகியவை ராசிக்காரர்களிடம் இருக்கும். இவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் விடாமுயற்சியுடன் தீர்ப்பார்கள். தங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் போட்டியாளர்களை விட மேலான நிலையைப் பெறுவார்கள்.
- விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் திட்டங்களை வகுப்பதில் சிறந்தவர்கள். 2025 ஆம் ஆண்டு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். ஆனாலும், இவற்றைக் கடந்து உச்சத்திற்கு அவர்களால் உயர முடியும். ராசியின் அதிபதியான செவ்வாய் மிகவும் வலிமையானவராக திகழ்கிறார். இவர்களுக்கு சூரியனும் சாதகமாக இருப்பதால், வேலை மற்றும் நிதி அடிப்படையில் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது.
- தனுசு: இந்த ராசிக்காரர்களின் தைரியம், வீரம், இலக்கு நிர்ணயம் மற்றும் லட்சியம் போன்ற குணங்கள் எந்தவொரு சவாலையும் அல்லது பிரச்சனையையும் தீர்ப்பவையாக அமையும். இவர்களிடம் இருக்கும் அடக்கமும் திறமையும் தொழில் மற்றும் வணிகங்களை லாபகரமாக்குவது மட்டுமல்லாமல், வேலையிலும் அவர்களுக்கு அதிகாரத்தையும் கொண்டு வரும். வேலையில்லாதவர்கள் நிச்சயமாக எந்தவொரு போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணல்களிலும் வெற்றி பெறுவார்கள். மேலும் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொண்டு தங்கள் தொழில் மற்றும் வணிகங்களை வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும்.
(ஜோதிட அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)