வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? – இந்த 3 பேருடன் நட்பு கொள்ளாதீர்கள்!

முட்டாள்கள், எப்போதும் எல்லா விஷயத்துக்கும் அழுது கொண்டிருப்பவர்கள், மற்றும் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுபவர்கள் ஆகியோரிடம் நட்பு கொள்ளக் கூடாது. இவர்களுடன் பழகுவது நம் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நட்பு என்பது சந்தன மரம் போல என்றும் நட்பாக இருக்க வேண்டும் என சாணக்கிய நீதி அறிவுறுத்துகிறது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேருடன் நட்பு கொள்ளாதீர்கள்!

நட்பு வட்டம்

Published: 

15 May 2025 16:26 PM

பொதுவாகவே வாழ்க்கையில் பலவிதமான உறவுகள் சூழ்ந்திருப்பார்கள். அத்தகைய உறவுகள் எப்போது அன்பை வெளிப்படுத்துவார்கள், எப்போது எதிரியாக மாறுவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாகும். இதில் நட்பு என்பது சந்தன மரத்தைப் போல இருக்க வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. காரணம் அந்த மரத்தை எவ்வளவு கழுவினாலும் அதன் மணம் என்றும் மாறாது. அது போல நட்பும் என்றைக்கும் நட்பாகவே இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. உண்மையான நட்பு எத்தனை சிரமங்களையும் இழப்புகளையும் சந்தித்தாலும் அப்படியே பல ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என நினைப்பார்கள். அதேசமயம் சிலருடன் நட்பு கொள்வது என்றும் எப்போதும் ஆபத்தானது என முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் தத்துவ குருவான ஆச்சார்ய சாணக்கியர் நட்பு கொள்ளக்கூடாத நபர்களைப் பற்றி சாணக்கிய நீதியில் தெரிவித்திருக்கிறார். அதனைப் பற்றிக் காணலாம்.

முட்டாள்களிடமிருந்து விலகி இருங்கள்

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கை மற்றும் நட்பு சிறக்க வேண்டுமானால் முட்டாள்களுடன் ஒருபோதும் பழகக்கூடாது என தெரிவித்துள்ளார். முடிந்தவரை வாழ்க்கையில் எந்தவொரு இடத்திலும் முட்டாள்களிடமிருந்தும், முற்போக்காக பேசுபவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அத்தகையவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் சிறந்தவர்களாகவும் கருதுகிறார்கள். மற்றவர்களை மனிதனாக கூட கருத மாட்டார்கள். நீங்கள் ஒரு முட்டாளுடன் நேரத்தைச் செலவிட்டு வந்தால் அவர் உங்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உங்கள் வேலையையும் நேரத்தையும் அழித்துவிடுவார் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

முட்டாள்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் தவறான முடிவுகளையே எடுப்பார்கள் என்றும், இந்த முடிவுகள் அவர்களுக்கு மட்டுமல்லாது உங்கள் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழுதுகொண்டே இருக்கும் நபர்

சிலர் எப்போது எல்லா விஷயத்துக்கும் அழுதுக் கொண்டே இருப்பார்கள். அதாவது தவறு மட்டுமே கண்டிபிடிப்பவர், தன்னால் முடியாது என பரிதாபத்தை உண்டாக்க நினைப்பவர்,  எரிச்சல் பட்டுக் கொண்டே இருப்பவர் என இத்தகைய நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.  இது போன்றவ நபர்கள் மிகவும் எதிர்மறையான மனநிலையைக் கொண்டிருப்பார்கள். அந்த மனநிலை உங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும் சூழலை உண்டாகும்.

எப்போதும் உயர்ந்தவர் என நினைப்பவர்

இந்த சமூகம் பொருளாதார ரீதியாக ஏற்ற, தாழ்வுகளை கொண்டிருக்கிறது. உறவுக்குள்ளும் பணம், செல்வம் என வரும்போது அந்த ஏற்ற தாழ்வு மேலோங்கி காணப்படுகிறது.  அதேசமயம் தான் தான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஆண், பெண் இருபாலரிடமும் உள்ளது. இப்படியான நபர்கள் மிகவும் சோம்பேறிகளாக இருப்பார்கள். அடிக்கடி பொய் சொல்வார்கள்.  கடுமையான வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வேலை நடந்தால் போதும் என நினைப்பார்கள்.

(சாணக்கிய நீதியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)