Astrology: மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு ராஜயோகம்!

2025 மே 31 அன்று சுக்கிரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. இது மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மகரம் ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும். குறிப்பாக நிதி வளர்ச்சி, வேலை மற்றும் தொழில் வளர்ச்சி, காதல் மற்றும் திருமண வாழ்வில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு ராஜயோகம்!

ஜோதிடப்பலன்

Published: 

22 May 2025 17:25 PM

ஜோதிடத்தில் கிரக நிலைகள் மிகவும் முக்கியமானது. அதில் 9 கிரகங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் வாழ்க்கையில் பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. அந்த வகையில் காதல், திருமணம், ஆடம்பரம், மகிழ்ச்சி போன்றவற்றிற்கு சுக்கிரன் கிரகம் காரணம் என சொல்லப்படுகிறது. இத்தகைய சுக்கிரன் 2025, மே 31 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க ராசியான மேஷம் இந்த காலத்தில் சுக்கிரனுக்கு சாதகமில்லாத நிலையாக உள்ளது. இருந்தாலும் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ராஜ யோகங்கள் உருவாகும். அதனால் அவர்கள் ஆடம்பர வாழ்க்கையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். ஜூன் 29 வரை மேஷத்தில் இருக்கும் சுக்கிரன், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு என்னென்ன பலன்களை தருவார் என பார்க்கலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்கு வருகை தரும் சுக்கிரனால் ராசிக்காரர்களுக்கு ஆசைகள் அதிகரிக்கும். இது எல்லை தாண்டும் அளவுக்கு கூட அமையலாம். காதல் வாழ்க்கையும் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும்.  சுக்கிரன் செல்வத்திற்கு அதிபதி என்பதால், ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் அதிவேக வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்கள், வேலைகள் மற்றும் வணிகங்கள் மிகப்பெரிய ஏற்றம் பெறும். பணியில் உள்ள அழுத்தம் பெருமளவு  குறையும்.
  2. மிதுனம்: இந்த ராசிக்கு மிகவும் சாதகமான கிரகமாக சுக்கிரன் உள்ளது. அதனால் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் நிலை ஏற்படும். அதன்படி பல வழிகளில் நிதி ஆதாயங்கள் இருக்கும்.  நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். பங்குகள், முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் எதிர்பார்ப்புகளை விட அதிக லாபத்தை கொடுக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்பு இருக்கும். காதல் வாழ்க்கையும் திருமண வாழ்க்கையும் நித்திய பேரின்பத்தை போல அமையும்.  தொழில், வியாபாரம் லாபகரமானதாக இருக்கும். நிதி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் தீரும்.
  3. கடகம்: இந்த ராசியின் பத்தாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். அதனால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குறைந்த முயற்சியில் அதிக லாபம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுடன் நல்ல தொடர்புகள் ஏற்படும். நல்ல பொருளாதார பின்னணி கொண்ட ஒருவருடன் காதல் அல்லது திருமணம் முடிவுப்பெறும். வருமானம் பல வழிகளில் வளர வாய்ப்பு வரலாம். பங்குகள், முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் நிச்சயம் லாபகரமாக இருக்கும்.
  4. சிம்மம்: இந்த ராசியின் சுப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது பெண்களுக்கு அதிகமான நிதி நன்மைகளைத் தரும். சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். நல்ல செய்திகள் அடிக்கடி கேட்பீர்கள். ஊழியர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு  வாய்ப்பு கிடைக்கும். தொழில்முறை மற்றும் வேலை காரணங்களுக்காக மற்ற நாடுகளுக்கு நிறைய பயணம் செய்ய வேண்டிய சூழல் வரும். தந்தை வழி சொத்துக்கள் கைக்கு வரும். புனிதப் பயணங்கள் செல்ல வாய்ப்பு உருவாகும்.  குழந்தைபேறு தொடர்பான செய்தி கிடைக்கலாம்.
  5. துலாம்: ராசியின் அதிபதியான சுக்கிரன் ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பதால், நல்ல பொருளாதார பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் காதல் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வேலை அல்லது வணிக நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். ஆடம்பர வாழ்க்கைக்குள் செல்வீர்கள். பயணங்களால் லாபம் ஏற்படும்.
  6. மகரம்: இந்த ராசிக்கு மிகவும் புனிதமான கிரகமாக கருதப்படும் சுக்கிரன் நான்காவது வீட்டில் பிரவேசித்ததால் திக்பல யோகம் உருவானது. இதனால் வேலையில் எதிர்பாராத வளர்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வணிகங்களில் புதிய பாதையை பிறக்கும். சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரும்.  தனிப்பட்ட மற்றும் நிதி பிரச்சனைகளில் பெரும்பாலானவற்றிலிருந்து நீங்கள் விடுதலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பும் உண்டாகும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

(ஜோதிட அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த வித அறிவியல் பூர்வமான விளக்கமும் இல்லை என்பதால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)