ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் மரியாதையே தனி தான்!
2025 மே 7 வரை மீன ராசியில் சனி, சுக்கிரன், ராகு, புதன் ஆகிய நட்பு கிரகங்களின் சாதகமான இணைவு ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம், கும்பம் ராசிகளுக்கு நன்மைகளைத் தரும். லாபம், வேலைவாய்ப்பு, திருமணம், நிதி வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடப்பலன்
ஜோதிடத்தில் இருக்கும் 9 கிரகங்களின் நகர்வுகள் என்பது தனிமனித வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தையும், சரிவையும் உண்டாக்கக்கூடியது. இந்த கிரகங்களின் செயல்பாடுகளை சரியாக கண்காணித்து அவற்றிற்கேற்ப நடக்கும்போது எல்லாம் சரியாக இருக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. இப்படியான நிலையில் மீன ராசியில் சனி, சுக்கிரன், ராகு, புதன் ஆகிய நான்கு நட்பு கிரகங்கள் இணைந்து இருப்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதகமான நட்சத்திரங்கள் வழியாகவும் பயணிக்கிறது. அதாவது இதில் ஒரு கிரகம் நன்றாக இருந்தாலும் மற்ற கிரகங்கள் ஒத்துழைக்கும் தன்மை கொண்டது. இந்த இணைப்பு 2025, மே 7 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு பல பலன்கள் கிடைக்கப்போகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
- ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் இந்த 4 நட்பு கிரகங்களின் சேர்க்கையால் அதிக பலன் கிடைக்கும். வாழ்க்கையில் பெரும்பாலும் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். குறைந்த முயற்சியில் அதிக லாபம் கிடைக்கும். மனதின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். வேலையில் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் இருக்கும். தொழில் மற்றும் வணிகங்கள் வளர்ச்சிப் பெறும். உங்கள் வேலை மற்றும் திருமண முயற்சிகள் குறித்து எதிர்பார்க்கப்படும் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
- மிதுனம்: பத்தாவது வீட்டில் 4 நட்பு கிரகங்களின் சேர்க்கை இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் நிச்சயமாக சில நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். வேலையில் முன்னுரிமை அதிகரிக்கும். அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை உயரும். தொழில் ரீதியான நடவடிக்கைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
- கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்தில் நிறைய கிரகப் பெயர்ச்சிகள் உள்ளன. இது பல வழிகளில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தர வல்லது. இனிமேல் அடிக்கடி நல்ல செய்திகள் கேட்பீர்கள். தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் குடும்பத்திலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் பெற்றோரிடமிருந்து தேவையான ஆதரவையும் உதவியையும் பெறுவீர்கள்.திருமணம் மற்றும் வேலை முயற்சிகளில் வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஸ்திரத்தன்மை ஏற்படும். செல்வம் பெருகும்.
- கன்னி: இந்த ராசியின் அதிபதியான புதன், ஏழாவது வீட்டில் மற்ற மூன்று நட்பு கிரகங்களுடன் சஞ்சரிப்பதால், திட்டமிட்ட பணிகள் மற்றும் விவகாரங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். உயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் காதல் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணத்திற்கான பாதை சீராக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். சிறிது முயற்சியால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- மகரம்: இந்த ராசியின் மூன்றாவது வீட்டில் நான்கு நட்பு கிரகங்கள் இணைந்திருப்பதால், மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் பொதுவாக நிறைவேறும். வருமானம் நன்றாக வளரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் செயல்பாடு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தியைக் கேட்பீர்கள். உறவினர்களுக்குள் திருமண உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேற்கொள்ளும் பயணம் மிகவும் லாபகரமாக இருக்கும். பிற நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அமையும். தனிப்பட்ட பிரச்சினைகள் குறையும்.
- கும்பம்: இந்த ராசிக்கு இரண்டாவது வீட்டில், அதாவது பணத்தின் வீட்டில் நான்கு கிரகங்கள் இருப்பது பல வழிகளில் வருமானத்தை அதிகரிக்கிறது. வருமான ஆதாரங்கள் பெரிதும் விரிவடையும். ஒரு சிறிய முயற்சியால், சராசரி மனிதர் கூட மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நிதி விஷயங்கள் மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வார்த்தைகளின் மதிப்பு அதிகரிக்கும். வேலையில் சம்பளம், சலுகைகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல திருமண வரன் அமையும்.
(ஜோதிட நம்பிக்கையின் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக எந்த விளக்கமும் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)