Gmail : இந்த 2 செட்டிங்க்ஸை உடனே பண்ணுங்க.. இல்லனா உங்க ஜிமெயில் ஏஐ-க்கு இரையாகிடும்! | TV9 Tamil News

Gmail : இந்த 2 செட்டிங்க்ஸை உடனே பண்ணுங்க.. இல்லனா உங்க ஜிமெயில் ஏஐ-க்கு இரையாகிடும்!

Updated On: 

08 Jan 2026 23:53 PM

 IST

Protect Gmail Account From Artificial Intelligence | ஜிமெயில் செயலியில் இருந்து சோதனைக்காக பயனர்களின் கணக்கு மற்றும் மெயில்களை பயன்படுத்திக்கொள்ளும் அம்சம் தானாகவே ஆன் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜிமெயில் செட்டிங்க்ஸை மாற்றி இந்த சிக்கலில் இருந்து பயனர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

1 / 5இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலிகளில் ஒன்றாக உள்ளது தான் ஜிமெயில். பள்ளி, கல்லூரிகள், அலுவலங்கள் என பல இடங்களில் ஜிமெயில் பிரதான செயலியாக உள்ளது. இந்த நிலையில், தான் ஜிமெயிலில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலிகளில் ஒன்றாக உள்ளது தான் ஜிமெயில். பள்ளி, கல்லூரிகள், அலுவலங்கள் என பல இடங்களில் ஜிமெயில் பிரதான செயலியாக உள்ளது. இந்த நிலையில், தான் ஜிமெயிலில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 

2 / 5

இதன் காரணமாக ஜிமெயில் பயனர்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பயனர்கள் தங்களது ஜிமெயில் கணக்கை மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் செயற்கை நுண்ணறிவு சோதனைக்காக அவர்களது ஜிமெயில் கணக்கு மற்றும் மெயில்கள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

3 / 5

உலக அளவில் ஏராளமான ஜிமெயில் பயனர்களின் கணக்குகளில், செயற்கை நுண்ணறிவு அம்சத்திற்கு தங்களது கணக்கு மற்றும் மெயில்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கும் அம்சம் தானாகவே ஆன் செய்யப்பட்டுள்ளதாவும், அந்த அனுமதியை பயனர்கள் மேனுவலாக மட்டுமே மாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 

4 / 5

அதற்கு உங்கள் ஜிமெயில் செயலிக்கு சென்று See all settings என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் உள்ள Smart Features என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஜிமெயில், சாட் மற்றும் கூகுள் மீட்டில் Turn on smart features in Gmail என்ற அம்சத்தை கிளிக் செய்து உங்கள் தரவுகளை பயன்படுத்த முடியாததாக மாற்ற வேண்டும்.

5 / 5

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி உங்களது ஜிமெயில் செட்டிங்க்ஸை மாற்றும் செய்யும் பட்சத்தில் உங்களது ஜிமெயில் கணக்கு மற்றும் மெயில்கள் செயற்கை நுண்ணறிவு சோதனைக்கு எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.