பங்குனி வளர்பிறை சஷ்டி.. வீட்டிலேயே வழிபடுவது எப்படி?.. பிரச்னைகளை தீர்க்கும் அறிய நாளை தவறவிடாதீர்.. | TV9 Tamil News

பங்குனி வளர்பிறை சஷ்டி.. வீட்டிலேயே வழிபடுவது எப்படி?.. பிரச்னைகளை தீர்க்கும் அறிய நாளை தவறவிடாதீர்..

Updated On: 

23 Mar 2026 14:04 PM

 IST

Panguni Sasti: வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், முன்னேற்றமின்மை மற்றும் மனக்கவலைகளுக்குக் காரணமாக இருக்கும் கர்ம வினைகளைக் கரைக்கும் சக்தி சஷ்டி விரதத்திற்கு உண்டு. வளர்பிறை சஷ்டியில் செய்யும் வழிபாட்டை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் உருவாகும் என்பது உறுதி.

1 / 5முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் மிக முக்கியமானது சஷ்டி திதி. அதிலும் வளர்பிறை காலத்தில் வரும் சஷ்டி, நம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியைத் தரக்கூடியது என ஆன்மீக ரீதியாகச் சொல்லப்படுகிறது. மார்ச் 24, 2026 அன்று வரும் இந்த வளர்பிறை சஷ்டி விரதத்தை எப்படி இருக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் மிக முக்கியமானது சஷ்டி திதி. அதிலும் வளர்பிறை காலத்தில் வரும் சஷ்டி, நம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியைத் தரக்கூடியது என ஆன்மீக ரீதியாகச் சொல்லப்படுகிறது. மார்ச் 24, 2026 அன்று வரும் இந்த வளர்பிறை சஷ்டி விரதத்தை எப்படி இருக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2 / 5

சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம்: வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், முன்னேற்றமின்மை மற்றும் மனக்கவலைகளுக்குக் காரணமாக இருக்கும் கர்ம வினைகளைக் கரைக்கும் சக்தி சஷ்டி விரதத்திற்கு உண்டு. வளர்பிறை சஷ்டியில் செய்யும் வழிபாடுகள் செல்வம், உடல்நலம், குடும்ப ஒற்றுமை மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்க்கும் என்பது நம்பிக்கை.

3 / 5

விரத நேரங்கள்: மார்ச் 23, இரவு 9:35 மணி ஆரம்பமாகும் சஷ்டி திதி மார்ச் 24, மாலை 7:12 மணிக்கு திதி முடிகிறது. மார்ச் 24 அன்று முழுநாளும் விரதம் இருந்து, மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை செய்யும் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. அதிகாலையில் எழுந்து முருகப்பெருமானை நினைத்து 'சரவணபவா' மந்திரத்தைச் சொல்ல வேண்டும். குளிக்கும்போது உடலோடு மனமும் சுத்தமாவதாக எண்ணுவது பலனை அதிகரிக்கும். வீட்டில் விளக்கேற்றி முருகனின் படத்திற்குப் பூக்கள் (முடிந்தால் சிவப்பு மலர்கள்) வைத்து வழிபடலாம்.

4 / 5

உடல்நிலைக்கு ஏற்ப முழுமையாக உண்ணாமலோ அல்லது பால், பழங்கள் மட்டும் உட்கொண்டோ விரதம் இருக்கலாம். விரதம் என்பது உணவைத் தவிர்ப்பது மட்டுமல்ல, மனதைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். விரதத்தின் போது கோபம், பொறாமை மற்றும் பிறரை நிந்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அமைதியான மனநிலையில் இருப்பதே உண்மையான விரதம். மாலை பூஜையின் போது விளக்கேற்றி, முருகனுக்குப் பால் அல்லது பழங்களை நெய்வேத்தியமாகப் படைக்க வேண்டும்.

5 / 5

விரதத்தின் பலன்கள்: தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுவதாக அனுபவப்பூர்வமாகச் சொல்லப்படுகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தல், திருமணத் தடைகள் நீங்குதல், நீண்ட நாள் உடல்நலப் பிரச்சனைகள் குணமாகுதல், தேவையற்ற மனிதர்கள் விலகி, நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்தல், கூடுதல் புண்ணியம் தரும் செயல்கள், இந்த நன்னாளில் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியையோ அல்லது பசியோடு இருப்பவர்களுக்கு உணவோ (தானம்) வழங்குவது முருகப்பெருமானின் அருளைப் பெற்றுத் தரும்.

Follow Us
Related Stories
M.Appavu Tamil Nadu Election: அன்று முதல் இன்று வரை.. மு.அப்பாவு கட்டுப்பாட்டில் ராதாபுரம் தொகுதி.. இந்த முறை எப்படி!
IPL 2026: ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள்.. ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட் வைத்த கெய்ல்..!
Sreeleela: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!
அதிகரிக்கும் கோடை வெப்பம்? ரூ.10 லட்சத்துக்குள் கிளைமேட் கண்டரோல் வசதியுடைய கார்கள் – டாப் 5 இதோ!
Anbil Mahesh Poyyamozhi Tamil Nadu Election: இருமுறை வெற்றி வாய்ப்பு… திருவெறும்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவாரா அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
பங்குனி உத்திரம் 2026.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீக பலன்களும், விளக்கமும்..