Budget 2026 : 2026 பட்ஜெட்டில் வரி விதிப்புகளை எளிமையாக்குமா அரசு?.. மிகுந்த எதிர்ப்பார்பில் முதலீட்டாளர்கள்! | TV9 Tamil News

Budget 2026 : 2026 பட்ஜெட்டில் வரி விதிப்புகளை எளிமையாக்குமா அரசு?.. மிகுந்த எதிர்ப்பார்பில் முதலீட்டாளர்கள்!

Updated On: 

15 Jan 2026 11:37 AM

 IST

Investors 2026 Budget Expectation | 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், வரி முறைகளை எளிமையாக்குவதற்கான எதிர்ப்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1 / 5ஜனவரி 28, 2026 அன்று மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். 

ஜனவரி 28, 2026 அன்று மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். 

2 / 5

அந்த வகையில், வரி முறைகளை எளிதாக்குவது குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. வரி முறைகளை எளிதாக்க கோரி அவர்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சிக்கலான வரி விதிப்பு மக்களை குழப்புவதோடு நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீடுகளை பாதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். 

3 / 5

முதலீடுகளுக்கு விதிகப்படும் வரிகள் மக்கள் தங்களது பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. இந்த நிலையில், சிக்கலான வரி அடுக்குகள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் நீண்ட கால முதலீட்டில் ஆர்வம் குறைவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். 

4 / 5

முதலீட்டாளர்கள் வரி விதிக்கப்படும் விதம், சேமிப்பு மற்றும் முதலீட்டு நடத்தை மீது நீண்ட கால விளைவுகளை கொண்டுள்ளது. இந்த நிலையில், ஒரு எளிய வரி அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த சுமைகளையும் குறைக்க முடியும் என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். 

5 / 5

சமமான முதலீட்டுத் திட்டங்களுக்கு இடையே உள்ள சீரற்ற வரி விதிப்பு பற்றிய கவலைகளையும் முதலீட்டாளர்கள் முன்வைத்துள்ளனர். இந்த முறை முதலீட்டாளர்களுக்கு குழப்பத்தையும், நியாயமற்ற விளைவுகளையும் உருவாக்குகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.