ஏஐ மூலம் டூர் பிளான் பண்ணுறீங்களா?.. இந்த சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடலாம்! | TV9 Tamil News

ஏஐ மூலம் டூர் பிளான் பண்ணுறீங்களா?.. இந்த சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடலாம்!

Updated On: 

06 Jan 2026 19:47 PM

 IST

Tour Planning With AI | பலரும் வெளி ஊர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு டூர் செல்ல ஏஐ உதவியை நாடுகின்றனர். அவ்வாறு ஏஐ மூலம் டூர் பிளான் செய்யப்படும் பட்சத்தில் அதில் என்ன என்ன சிக்கல்கள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5மனிதர்களின் அன்றாட வாழ்வின் தேவைகளில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு அம்சம் மாறிவிட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள், தகவல்கள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களில் தேடுகின்றனர். தனிப்பட்ட தகவல்கள், பொருளாதாரம், காதல் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்காகவும் பொதுமக்கள் இந்த ஏஐ சாட்பாட்களை பயன்படுத்துகின்றனர். 

மனிதர்களின் அன்றாட வாழ்வின் தேவைகளில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு அம்சம் மாறிவிட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள், தகவல்கள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களில் தேடுகின்றனர். தனிப்பட்ட தகவல்கள், பொருளாதாரம், காதல் உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்காகவும் பொதுமக்கள் இந்த ஏஐ சாட்பாட்களை பயன்படுத்துகின்றனர். 

2 / 5

அவ்வாறு பலரும் டூர் செல்வதற்கும், வெளி ஊர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான ஆலோசனைகளை ஏஐ சாட்பாட்கள் மூலம் தேடுகின்றனர். யூடியூப் உள்ளிட்ட சமூக வளைத்தளங்கள் வீடியோக்கள், டிராவல் இணையதளங்களில் தேடுவதை விடவும் ஏஐ சாட்பாட்களில் தேடுவது நேரத்தை குறைக்கிறது. ஆனால், ஏஐ-ல் டூர் செல்ல தேடுவதில் சில சிக்கல்கள் உள்ளன.

3 / 5

ஏஐ மூலம் நீங்கள் சுற்றுலா தளங்களை தேடும்போது அது பொதுவான மற்றும் மிகவும் பிரபலமான இடங்களை மட்டுமே காட்டும். இதன் மூலம் நீங்கள் செல்லும் இடத்தில் அதிக மக்கள் கூட்டணம், கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது உங்கள் பயணத்தை அவ்வளவு சிறப்பானதாக இருக்க செய்யாது. 

4 / 5

Ai (5)

5 / 5

ஏஐ ஏற்கனவே இருக்கும் தகவல்களை மட்டுமே கொடுக்கும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சமீபத்திய தகவல்களை தராது. இதன் காரணமாக ஒரு இடத்தில் உள்ள சிறப்புகள் அல்லது அங்கு சமீபத்தில் என்ன நடந்துள்ளது என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியாமல் போய்விடும்.