Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Travel Guide: இந்த சம்மருக்கு சுற்றுலா செல்ல செம கூலிங்கான இடங்கள்!

Travel Guide: பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். அப்படி இந்தியாவில் அதிக குளிர் நிறைந்த பகுதிகளை இந்த பட்டயலில் பார்க்கலாம்.

Travel Guide: இந்த சம்மருக்கு சுற்றுலா செல்ல செம கூலிங்கான இடங்கள்!
லடாக்
karthikeyan-s
Karthikeyan S | Published: 19 Apr 2025 22:57 PM

கோடை விடுமுறையில் (Summer Holidays) குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களை தேர்ந்தெடுப்பதற்குள் விடுமுறை முடிந்துவிடும். அந்த அளவுக்கு எங்கே செல்வது, அதற்கு ஆகும் செலவுகள், எங்கே தங்குவது இப்படி திட்டமிடுவதற்கே நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். வெப்பத்தை தணிக்க குளுமையான இடங்களை தேடிப்போவது தான் பலரும் விரும்புவர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஊட்டி (Ooty), கொடைக்கானல் (Kodaikanal), ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகள் கோடைக்கு ஏற்ற பகுதிகள். தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவில் சில இடங்கள் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் குளிராகவே இருக்கும். குறிப்பாக இமாச்சல பிரதேசம், லடாக், சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள சில தலங்கள் கோடை விடுமுறைக்கு ஏற்ற மிகச் சிறந்த தலங்களாக பார்க்கப்படுகிறது . இந்த இடங்களில் வெயில் காலத்திலும் பனி உருகும் குளிர் நிலவும். இந்த இடங்களை பற்றி தெரிந்துகொண்டு உங்கள் சும்மர் ஹாலிடே பிளானை திட்டமிடுங்கள்.

லடாக்

இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் கடும் குளிரும், பனிமலைகளும் காணப்படும். சாகச விளையாட்டுகளுக்கு இது சிறந்த இடமாகும். பஞ்சேல் லேக், லே சிட்டி போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.

சிக்கிம்

ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இந்த இடம், கோடைக்கால சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த தேர்வாகும். பசுமை, அமைதி மற்றும் குளிர்ந்த காற்றுடன் ஒரு பிரம்மாண்டமான அனுபவத்தைத் தரும். பங்கோம் ஏரி, மோகன் வரூக் போன்றவை இங்கே பார்க்க வேண்டிய இடங்கள்

சோனாமார்க்

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த இடம்,  பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீநகரிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது.  ஸ்ரீநகரிலிருந்து சோனாமார்க்கு பஸ்கள், டாக்ஸிகள் மூலமாக பயணிக்கலாம். சோனாமார்க் பகுதியின் வெப்பநிலை கோடை காலத்திலும் 10 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் ஆகவே இருக்கும். இது ஒரு அழகான ரொமான்டிக் சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது. இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் சிந்து நதி இங்கு பாய்கிறது. இங்கே அமைந்துள்ள தாஜிவாஸ் பனிமலையில் பனிச்சறுக்கு மற்றும் குதிரை சவாரி பிரபலமானவை. கிஷன்கங்கா ஆறு, சட்கடி ஹில், மற்றும் பால்தல் போன்ற பகுதிகள் இயற்கையை ரசிக்க மிக சிறந்த இடங்களாக கருதப்படுகிறது.

ரெகாங் பியோ

கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இமாச்சல பிரதேசத்தின் இயற்கை அழகையும், கலாசார வளத்தையும் விரிவாக அறிய விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற இடம். பூத்நாத் கோயில், மூறங்க் கோம்பா என்ற பழமையான புத்த மடாலயம் ஆகியவை இதன் சிறப்புகள். இமாச்சல பிரதேசத்தின் ஸ்பெஷலான ஆப்பிள்கள் ஏராளமாக இங்கு விளைகின்றன. சுத்தமான காற்று, இயற்கை காட்சிகள் மற்றும் இங்கு கிடைக்கும் பாரம்பரிய உணவுகள்  என அனைத்தும் சேர்ந்து  மனதிற்கு அமைதியைத் தரும்.

இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் - வரவிருக்கும் புதிய அப்டேட்
இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் - வரவிருக்கும் புதிய அப்டேட்...
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி...
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!...
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை...
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!...
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!...
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!...
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?...
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!...
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!...
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!...