Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Easter 2025: ஈஸ்டர் பண்டிகை.. அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்தை அனுப்புங்க!

ஈஸ்டர் பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் முக்கியமான கிறிஸ்தவத் திருநாளாகும். மார்ச்-ஏப்ரல் மாத பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் இது, மரணத்தை வென்று வாழ்க்கை பெற்ற வெற்றியைக் குறிக்கிறது. இத்திருநாளில், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பக்கூடிய வாழ்த்துச் செய்திகள் பற்றிக் காணலாம்.

Easter 2025: ஈஸ்டர் பண்டிகை.. அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்தை அனுப்புங்க!
ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்!
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Apr 2025 07:14 AM

ஈஸ்டர் பண்டிகை (Easter Eve) கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். ஈஸ்டர் என்பது மரணத்தை தோற்கடித்து வாழ்க்கை பெற்ற வெற்றியின் கொண்டாட்டமாகும். யார் ஒருவர் நல்லது செய்கிறாரோ அவர்களுக்கு என்றைக்கு மரணம் கிடையாது. மறுபிறப்பு இருந்துக் கொண்டே இருக்கும் என சொல்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்துவின் (Jesus Christ) வாழ்க்கையாகும். மனித குலம் செய்த பாவ காரியங்களில் இருந்து அவர்களை மீட்கும்பொருட்டு தன்னுயிர் தந்து மரணித்த இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த நாளே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மார்ச் – ஏப்ரல் மாத பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சந்திர சுழற்சிகளின்படி தேதி மாறும் நிலையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி இப்பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.கிட்டதட்ட 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி நாள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் குருத்தோலை ஞாயிறு (இயேசுவின் ஜெருசலேம் நுழைவு), புனித வியாழன் (கடைசி இரவு உணவு), புனித வெள்ளி (இயேசுவின் சிலுவை மரணம்) மற்றும் ஈஸ்டர் ஞாயிறு (இயேசுவின் உயிர்த்தெழுதல்) ஆகியவை அடங்கும்.

இந்த நாள் வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிப்பதாகவும் அமைகிறது. இப்படியான நிலையில் ஈஸ்டர் பண்டிகையன்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என்னென்ன வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்பது பற்றிக் காணலாம்.

  • மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அன்பான குடும்ப தருணங்கள் நிறைந்த ஆசீர்வதிக்கப்பட்ட தினமாக இந்நாள் அமையட்டும் . 2025 ஈஸ்டர் வாழ்த்துக்கள்!
  • இந்த ஈஸ்டர் திருநாள் புதிய நம்பிக்கையையும், புதிய தொடக்கங்களையும், முடிவற்ற ஆசீர்வாதங்களையும் கொண்டு வரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  • உங்கள் இதயம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியாலும், வசந்த காலத்தின் வாக்குறுதியாலும் நிரப்பப்படட்டும்.
  • இந்த ஈஸ்டர் நாளின் உங்களுக்கு அன்பு, அமைதி மற்றும் சாக்லேட் நிறைந்த கூடை கிடைக்க வாழ்த்துக்கள்!
  • உங்கள் ஈஸ்டர் சிரிப்புத் தருணங்களாலும், இனிமையான நினைவுகளாலும் பிரகாசிக்கட்டும்!
  • ஒளி எப்போதும் இருளைப் பின்தொடர்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காக ஈஸ்டர் இங்கே – நம்பிக்கையுடன் இருங்கள். எல்லாம் வசப்படும்!
  • இந்த ஈஸ்டர் உங்களை அன்புக்குரியவர்களுடன் நெருக்கமாகவும், உங்கள் கனவுகளுடன் நெருக்கமாகவும் கொண்டு வரட்டும்!
  • ஈஸ்டரின் அற்புதம் உங்கள் இதயத்தை அமைதியாலும், உங்கள் வாழ்க்கையை நோக்கத்தாலும் நிரப்பட்டும்!
  • உங்கள் ஈஸ்டர் வசந்த காலத்தைப் போலவே இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகிறேன்!
  • ஈஸ்டர் ஞாயிறில் அமைதி, அன்பு மற்றும் மகிழ்ச்சிக்கான நேரம் – உங்களுக்கு இவை மூன்றும் கிடைக்க வாழ்த்துக்கள்!
  • அமைதி, நம்பிக்கை, அன்பு மற்றும் புதிய வாழ்க்கையின் அழகின் கொண்டாட்டமாக ஈஸ்டர் ஞாயிறு இருக்கட்டும்!

இதுபோன்ற வாழ்த்துக்களை உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள். அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்!

கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!...
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு...
வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்!
வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்!...
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோல் பை செய்யும் பணி தீவிரம்!
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோல் பை செய்யும் பணி தீவிரம்!...
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு...
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?...
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?...
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்...
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...