இரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா? 7 சிறந்த உடற்பயிற்சிகள் !

Simple Daily Exercises : நீங்கள் தினசரி செய்யக்கூடிய எளிய 7 உடற்பயிற்சிகள் மூலம், இரத்தச் சர்க்கரையை இயற்கையாக கட்டுப்படுத்தலாம். இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் இன்சுலின் செயல்திறனையும் மேம்படுத்தும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா?  7 சிறந்த உடற்பயிற்சிகள் !

மாதிரி புகைப்படம்

Updated On: 

05 May 2025 21:35 PM

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சரியான உணவுமுறையும் உடற்பயிற்சியும்தான் நம் உடல்நலத்தைக் காக்கும் இரண்டு முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக இரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரை (Blood Sugar) அளவு ஆகியவற்றை சரியான அளவில் வைத்துக்கொள்வதில் தினசரி செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. குறிப்பாக மருந்துகளோடு சேர்ந்து, சீரான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். அதற்காக மிகவும் கடினமான உடற்பயிற்சி தேவையில்லை.  எளிய, தினசரி உடற்பயிற்சிகள் கூட உங்களின் உடல்நலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தக் கட்டுரையில், நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய, எளிமையான ஏழு உடற்பயிற்சிகளைப் பற்றி பார்க்கலாம். அவை உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை இயற்கையாக கட்டுப்படுத்துவதற்கும், நீடித்த நல வாழ்விற்கும் உதவும்.

நடைபயிற்சி (Walking)

மிதமான வேகத்தில் தினமும் 30 நிமிடங்கள் நடப்பது, இன்சுலின் அளவை சீராக்கி, இரத்தச் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.  இதனை வீட்டிலேயே அரை மணி நேரத்தில் நடப்பது உடல் நலத்தைக் காக்கும்.

சைக்கிளிங் (Cycling)

இது கால்களை உறுதியூட்டும் பயிற்சி மட்டுமல்லாமல், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. வீட்டில் உள்ள ஸ்டேஷனரி சைக்கிள் அல்லது வெளியே சைக்கிள் ஓட்டலாம்.

நடனம் (Dancing)

நம் உடலை ஆக்டிவாக வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் நடனம் மிகச் சிறந்த வழி. இது வெறும் மகிழ்ச்சிக்கே அல்ல, உடல் நலத்திற்கும் பயனளிக்கும்.

யோகா (Yoga)

ஒரே நேரத்தில் சீரான சுவாசம், உடற்பயிற்சி மற்றும் மன அமைதி ஆகியவை ஒரே நேரத்தில் கிடைக்கும். யோகா, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளது.

ஸ்குவாட்ஸ் (Squats)

பாதங்களை சற்று அகலமாக வைத்து மெதுவாக அமர்ந்து எழும் பயிற்சி. இது கால்களில் தசை உறுதியை அதிகரித்து இன்சுலின் உற்பத்தியை தூண்டும்.

படிகளில் ஏறி இறங்குதல் (Stair Climbing)

அடிக்கடி படிகளில் ஏறி இறங்குவது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

நீச்சல் (Swimming)

முழு உடலை இயங்க வைக்கும் இந்த பயிற்சி, உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். நீச்சலால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்து மட்டுமல்லாமல் சோர்வு ஏற்படுவதும் தடைபடும்.

ஒவ்வொரு பயிற்சியையும் ஆரம்பிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். பயிற்சிக்குப் பிறகு இரத்தச் சர்க்கரை அளவை பரிசோதிக்கவும். உடற்பயிற்சிக்கேற்ப உணவையும் மருந்துகளையும் சரிசெய்யவும். முறையாகவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், நீண்ட காலத்தில் இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு நமக்கு நல நன்மைகள் விளையும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)