“பாகிஸ்தானுடன் வர்த்தம், பேச்சுவார்த்தை இல்லை” பிரமர் மோடி பேச்சு

PM Modi on Pahalgam Attack : பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சுவார்த்தையோ இல்லை என்றும் பேச்சுவார்த்தை என்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நாம் அழித்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் வர்த்தம், பேச்சுவார்த்தை இல்லை” பிரமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

Updated On: 

22 May 2025 13:34 PM

ராஜஸ்தான், மே 22 : ராஜஸ்தான் மாநிலம் பிகானோருக்கு சென்ற பிரதமர் மோடி (PM Modi), பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மின்சாரம், ஏரிசக்தி,  போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.26,000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்திருக்கிறார். இதன்பின்பு, இந்நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பேசி உள்ளார். அதாவது, ”ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பயங்கரவாதிகளுக்கு 22 நிமிடங்களில் பதிலடி கொடுத்தோம். பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நாம் அழித்திருக்கிறோம். இரத்தம் அல்ல, என் நரம்புகளில் சிந்தூர் கொதிக்கிறது. நமது ஆயுதப் படைகளின் வீரத்தால், பாகிஸ்தான் தலைவணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தாக்குதல் நடந்த 22 நிமிடங்களுக்குள், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

“பாகிஸ்தானுடன் வர்த்தம், பேச்சுவார்த்தை இல்லை”

இந்தியாவின் பதிலடி எதிரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியது. நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. நமது முப்படைகளின் சக்கரவியூக தாக்குதலால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சுவார்த்தையோ இல்லை. பேச்சுவார்த்தை என்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே” என்றார்.

தொடர்ந்து பேசிய  அவர், “இந்தியாவுடனான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எனவே, அது பயங்கரவாதத்தை இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. சுதந்திரத்திற்குப் பிறகும் பல தசாப்தங்களாக இது தொடர்ந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பரப்பியது. அப்பாவி மக்களைக் கொன்றது.

பயங்கரவாத சூழலை உருவாக்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது, இப்போது பாரதத் தாயின் சேவகர் மோடி இங்கே பெருமையுடன் நிற்கிறார். மோடியின் மனம் குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவரது இரத்தம் சூடாக இருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூன்று சூத்திரங்களைத் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மோடி பேச்சு


முதலாவதாக, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அவர்களுக்குத் தகுந்த பதிலடி கிடைக்கும். நமது படைகள் நேரம், நிலைமைகளைத் தீர்மானிக்கும். இரண்டாவதாக, அணுகுண்டு அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. மூன்றாவதாக, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் நாம் தனித்தனியாகப் பார்க்க மாட்டோம். பாகிஸ்தானின் உண்மையான முகம் முழு உலகிற்கும் காட்டப்படும்” என்றார்.