வரம்பு மீறுகிறது.. டாஸ்மாக் வழக்கில் ED-ஐ கண்டித்த நீதிமன்றம்.. விசாரணைக்கு தடை!

supreme court on Tasmac Case : டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.

வரம்பு மீறுகிறது.. டாஸ்மாக் வழக்கில் ED-ஐ கண்டித்த நீதிமன்றம்.. விசாரணைக்கு தடை!

அமலாக்கத்துறை

Updated On: 

22 May 2025 13:31 PM

டெல்லி, மே 22 : டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்தார். டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை 2025 மார்ச் மாதம் சோதனை நடத்தியது. இதனை சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை, ரூ.1,000 வரை ஊழல் நடந்ததாக கூறியது. எனவே, அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாம் வழக்கு தொடர்ந்தது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதில் எந்தவித அரசியல் உள்நோக்கம் இல்லை என்று கூறியது. மேலும், நாட்டின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டப்படி விசாரணை நடத்தவும் அனுமதி அளித்தது.

இதற்கிடையில், மீண்டும் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்த டாஸ்மாக் நிர்வாகம் வழக்கை விரைந்து விசாரிக்க கோரியுள்ளது.

இதனை ஏற்ற உச்ச நீதிமன்ற பதிவாளர், 2025 வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறினார். இதனை அடுத்து, 2025 மே 22ஆம் தேதியான இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாடு, அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.

டாஸ்மாக் வழக்கில் ED-ஐ கண்டித்த நீதிமன்றம்


அதாவது, “அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். தனி நபர் விதிமீறலுக்கான ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? அதிகாரிக்கு எதிராக வழக்குப்பதிவு செசய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்போது, அமலாக்கத்துறை அங்கு என்ன வேலை?” என நீதிமன்ற சரமாரியாக கேள்வி எழுப்பியது.