Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Waqf Act : வக்ஃப் திருத்தச் சட்டம்.. எந்த நடவடிக்கையும் கூடாது.. உச்சநீதிமன்றம் தடை

Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, உறுப்பினர் நியமனமும் சொத்து வகைப்படுத்தலும் தடை செய்யப்பட்டுள்ளது. "இஸ்லாமியர்கள் இந்து அறக்கட்டளையில் நியமிக்கப்பட முடியுமா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 73 மனுக்களில் 5 ரிட் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன; மேலும் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Waqf Act : வக்ஃப் திருத்தச் சட்டம்.. எந்த நடவடிக்கையும் கூடாது.. உச்சநீதிமன்றம் தடை
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 17 Apr 2025 15:36 PM

டெல்லி ஏப்ரல் 17: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் உறுப்பினர் நியமனம் மற்றும் சொத்து வகைப்படுத்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் தாக்கல் செய்த 73 மனுக்களில் 5 ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2025 ஏப்ரல் 16-ல் நடைபெற்ற விசாரணையில், “இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளையில் நியமிக்கப்பட முடியுமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மத்திய, மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் இந்த சட்டத்திருத்தம் முஸ்லீம்களின் நிலங்களை பறிக்கும் நோக்கத்தில் வந்தது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டமன்றங்களில் எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டிருந்தது.

வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

இந்த நிலையில் வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று 2025 ஏப்ரல் 17 முக்கியமான இடைக்கால தீர்ப்பு வெளியானது. வக்ஃப் திருத்தச் சட்டத்தின் படி எந்தவிதமான உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டித்து, தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், வக்ஃப் சொத்துக்களை அங்கீகரிப்பது அல்லது அந்த அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரணை

இந்த வழக்கு குறித்து கடந்த 2025 ஏப்ரல் 16-ம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரும் இந்த அமர்வில் உடன் இருந்தனர். அதன்போது, “வக்ஃப் வாரியங்களில் இந்துக்கள் உறுப்பினராக இருக்க முடிகிறதெனில், அதேபோல் இந்து அறக்கட்டளைகளிலும் இஸ்லாமியர்கள் உறுப்பினராக இருக்க முடியுமா?” என நீதிபதிகள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.

வக்ஃப் திருத்தச் சட்டம்: 5 ரிட் மனுக்களை விசாரிக்க முடிவு

வக்ஃஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய், AIMIM எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 73 பேரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், 5 ரிட் மனுக்களை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களும் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்தம் முஸ்லீம்களின் உரிமைகளை பாதிக்கும் விதத்தில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, இந்த திருத்தம் முஸ்லீம்களின் நிலங்களை பறிக்கக் கருதியதென்றும் பல்வேறு மாநில அரசுகள் தமிழகம்—தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. சில மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தற்காலிக தடை

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தற்காலிக தடையை விதித்துள்ளதோடு, இந்த வழக்கில் தொடர்ந்தும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் அமலாக்கம் குறித்து மத்திய அரசிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளதுடன், சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக் - அரசு எடுத்த முக்கிய முடிவு!
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக் - அரசு எடுத்த முக்கிய முடிவு!...
இளம் இயக்குநருடன் இணையும் ரஜினி? - ரசிகர்கள் ஆச்சர்யம்!
இளம் இயக்குநருடன் இணையும் ரஜினி? - ரசிகர்கள் ஆச்சர்யம்!...
அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - பிரதீப் ஜான்
அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - பிரதீப் ஜான்...
10, 11ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
10, 11ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது?...
நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்... சிறப்பம்சங்கள் என்னென்ன?
நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்... சிறப்பம்சங்கள் என்னென்ன?...
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டிய சூரியை புகழ்ந்த வைரமுத்து!
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டிய சூரியை புகழ்ந்த வைரமுத்து!...
ரஜினி படத்தில் நடிக்க காரணம் இதுதான் - கார்த்திக் சுப்பராஜ்
ரஜினி படத்தில் நடிக்க காரணம் இதுதான் - கார்த்திக் சுப்பராஜ்...
முடி மாற்று சிகிச்சை செய்த பல் மருத்துவர் - இருவர் பலி!
முடி மாற்று சிகிச்சை செய்த பல் மருத்துவர் - இருவர் பலி!...
இன்று முதல் மீண்டும் ஐபிஎல்.. பெங்களூரு - கொல்கத்தா மோதல்!
இன்று முதல் மீண்டும் ஐபிஎல்.. பெங்களூரு - கொல்கத்தா மோதல்!...
பெற்றோர் திட்டியதால் மாடியில் இருந்து குதித்த சிறுமி - அதிர்ச்சி
பெற்றோர் திட்டியதால் மாடியில் இருந்து குதித்த சிறுமி - அதிர்ச்சி...