இந்தியா சத்திரம் அல்ல, 140 கோடி மக்களுடன் கஷ்டபடுறோம் – இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம் கருத்து

Supreme Court on Lankan Refugee : இந்தியாவில் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல எனவும் ஏற்கனவே 140 கோடி மக்களுடன் சிரமப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியா சத்திரம் அல்ல, 140 கோடி மக்களுடன் கஷ்டபடுறோம் - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம் கருத்து

உச்சநீதிமன்றம்

Updated On: 

19 May 2025 17:10 PM

இந்தியாவில் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA ) மீதான வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைத் (Srilanka) தமிழர்கள் 7 ஆண்டு சிறைத்தண்டனையை முடிந்தவுடன், உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் திபங்கர் தத்தா, கே.வினோத் சந்திரன் அடங்கியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், அவர் ஒரு இலங்கைத் தமிழர் என்றும், விசாவில் இங்கு வந்ததாகவும், அவரது சொந்த நாட்டில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். மனுதாரர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் விளக்கமளித்தார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரில் விடுதலைப் புலிகளின் உறுப்பினராகப் போராடியதால், இலங்கையில் தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக மனுதாரர் நீதிமன்றத்தில் கூறினார். எனவே, தன்னை அங்கு திருப்பி அனுப்பினால், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவேன் என்று கூறினார். மேலும், தனது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், தனது மகன் பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.சுதாகரன், எஸ்.பிரபு ராமசுப்ரமணியன், ஏஎஸ்ஏஓஆர் வைரவன் ஆகியோர் வாதிட்டனர்.

இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என நீதிபதி கருத்து

இதனையடுத்து அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நீதிபதி திபங்கர் தத்தா, இந்தியா ஒரு சத்திரம் அல்ல எனவும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்தியா தங்குமிடம் அளிக்கவில்லை என்றும் கூறினார். உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் போராடுகிறோம். இந்கியா வெளிநாட்டினரை மகிழ்விக்கக்கூடிய தர்மசாலா அல்ல,” என்று அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி தீபங்கர் தத்தா கூறினார்

மனுதாரர் தனது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார் என்று வழக்கறிஞர் கூறியபோது, ​​நீதிபதி தத்தா, “வேறொரு நாட்டிற்குச் செல்லுங்கள்” என்று பதிலளித்தார். சமீபத்தில், ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகலின் ஆதரவாளர்?

கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில், நீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 10 இன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது, ஆனால் தண்டனைக்குப் பிறகு உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும், அவர் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை அகதிகள் முகாமில் தங்கவும் உத்தரவிட்டது.