ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி.. பாஜக கடும் கண்டனம்!

Rahul Gandhi Remark on Ramar Sparks Controversy | சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ராமர் குறித்து கூறிய கருத்துக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், ராகுல் காந்தியின் அந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி.. பாஜக கடும் கண்டனம்!

ராகுல் காந்தி

Updated On: 

05 May 2025 08:23 AM

சென்னை, மே 05 : ராமர் என்பவர் கற்பனையான புராண கதாப்பாத்திரம் என்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தில் பலகலைக்கழ நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் அவர் கூறியுள்ள கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி ராகுல் காந்திக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக்கழக விழாவில் ராகுல் காந்தி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா பல்கலைகழக நிகழ்ச்சியில் ராமர் குறித்து பேசிய ராகுல் காந்தி

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாற்றினார். இந்த கலந்துரையாடலில், அவரிடம் முன்வைக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். அந்த வகையில், இந்து தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் மதசார்பற்ற அரசியல் எவ்வாறு வடிவம் பெற வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய அவர் புத்தர், குருநாக் மகாத்மா காந்தி, அம்பேத்கர், கர்நாடகாவின் பசவர், கேரளாவின் நாராயண குரு உள்ளிட்ட இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள் யாரும் மதவெறியர்கள் அல்ல. இவர்களில் யாரும் நாங்கள் மக்களை தனிமை படுத்த விரும்புகிறோம் என்று கூறவில்லை. இவர்கள் அனைவரும் நமது அரசியலமைப்பில் உள்ள குரல்கள். இவர்கள் அனைவரும் ஒரே விஷயத்தை தான் கூறினார்கள். இதுதான் இந்திய பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடித்தளம் என்று கூறினார்.

வைரலாகும் ராகும் காந்தியின் வீடியோ – பாஜக கடும் கண்டனம்

தொடர்ந்து பேசிய அவர், நமது புராண கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ள ராமர் உள்ளிட்டவர்களும் அப்படிப்பட்டவர்கள் தான். ராமர் மன்னிக்கும் குணம் கொண்டவர், கருணை உள்ளம் கொண்டவர். பாஜக சொல்வதை இந்து மத சிந்தனை என்று நான் கருதவில்லை. இந்து சிந்தனை மிகவும் பன்மை துவமானது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என நான் கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், நாட்டின் துரோகி காங்கிரஸ். ராமர் கற்பனை கதாப்பாத்திரம் என ராகுல் கூறுகிறார். இதனால் தான் அவர்கள் ராமர் கோயிலை எதிர்த்தனர் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவா கூறியுள்ளார். இவ்வாறு பாஜகவினர் தொடர்ந்து தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.