Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அட கொடுமையே… சூட்கேஸில் காதலி.. ஹாஸ்டலில் கையும் களவுமாக சிக்கிய மாணவர்.. வைரல் வீடியோ!

Haryana University Student Viral Video: ஹரியானாவில் தன் காதலியை பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் மாணவர் ஒருவர் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸில் இருந்து சத்தம் கேட்டுள்ளதை அடுத்து, பாதுகாவலர்கள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்ததில், மாணவர் சிக்கிக் கொண்டார்.

அட கொடுமையே…  சூட்கேஸில் காதலி..  ஹாஸ்டலில் கையும் களவுமாக சிக்கிய மாணவர்.. வைரல் வீடியோ!
காதலியை சூட்கேஸில் வைத்த மாணவர்Image Source: screengrab
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Apr 2025 15:37 PM

ஹரியானா, ஏப்ரல் 12: ஹரியானாவில் காதலியை காதலன் சூட்கேஸில் மறைத்து வைத்து ஆண்கள் விடுதிக்கு கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் விடுதிக்குள் நுழைந்த காதலன், சோதனையின்போது பாதுகாவலர்களிடம் வசமாக சிக்கினார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

சூட்கேஸில் காதலி

இவர் ஓபி ஜிண்டால் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக விடுதிக்குள் ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து வந்திருக்கிறார். எடுத்து வரும்போது, சூட்கேஸில் இருந்து சத்தம் கேட்டிருக்கிறது.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் உடனே மாணவரிடம் இதில் என்ன இருக்கிறது என்று கேட்டிருக்கின்றனர். இதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக அந்த மாணவர் இருந்துள்ளார். அப்போது, அந்த சூட்கேஸ் தானாகவே அசைந்துள்ளது.

மேலும், அந்த சூட்கேஸில் சத்தமும் கேட்டிருக்கிறது. இதனை பார்த்த பாதுகாவலர்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, இளம்பெண் ஒருவர் சூட்கேஸில் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பெண்ணை சூட்கேஸில் இருந்து வெளியே மீட்டனர்.

ஹாஸ்டலில் கையும் களவுமாக சிக்கிய மாணவர்


சூட்கேஸில் இருந்த இளம்பெண் யார்? எந்த கல்லூரியில் படிக்கிறாரா? இதே பல்கலைக்கழகத்தில் படிக்கிறாரா? என்ற எந்த தகவலும் வெளிவராத நிலையில், அதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சூட்கேஸில் இருந்தது அந்த மாணவரின் காதலி என்று கூறப்படுகிறது. இதுவரை, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விஷயத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சோஷில் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துகளையும், மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகம் கூறுகையில், “இது பெரிய விஷயமல்ல. மாணவர்கள் குறும்புத்தனமாக நடந்து கொண்டனர். எங்கள் பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் தான், மாணவர் பிடிபட்டார். இது பெரிய விஷயமல்ல. எங்கள் பாதுகாப்பு எப்போதும் கடுமையாக இருக்கும். மேலும் இந்த விஷயம் தொடர்பாக யாரும் எந்த புகாரும் பதிவு செய்யவில்லை” என்று பல்கலைக்கழகத்தின் பிஆர்வோ கூறினார்.

 

பிரைம் வீடியோவில் விளம்பரமில்லாமல் பார்க்க இவ்வளவு கட்டணமா?
பிரைம் வீடியோவில் விளம்பரமில்லாமல் பார்க்க இவ்வளவு கட்டணமா?...
உலக கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கவாஸ்கர் கருத்து!
உலக கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கவாஸ்கர் கருத்து!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தால் தங்கம் விலை 3.7% குறைவு!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தால் தங்கம் விலை 3.7% குறைவு!...
ஜம்மு காஷ்மீரில் அதிரடி.. 3 பயங்கரவாதிகளை அழித்த இந்திய இராணுவம்!
ஜம்மு காஷ்மீரில் அதிரடி.. 3 பயங்கரவாதிகளை அழித்த இந்திய இராணுவம்!...
மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா
மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா...
கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. பஞ்சாபில் அதிர்ச்சி!
கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. பஞ்சாபில் அதிர்ச்சி!...
பொள்ளாச்சி வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு
பொள்ளாச்சி வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு...
CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!...
தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?
தினமும் காலை உணவில் ஏன் ராகியை சேர்க்க வேண்டும்?...
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி.. சொன்னது என்ன?...
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?
கூலியில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினி எப்படி நடித்துள்ளார் தெரியுமா?...