CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

CBSE 10th Public Exam Result Declared | இந்தியா முழுவதும் 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 93.66 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தன் நிலையில், தேர்வு முடிவுகளின் முழு விவரம் மற்றும் தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 May 2025 14:30 PM

சென்னை, மே 13 : நாடு முழுவதும் சிபிஎஸ்இ (CBSE – Central Board of Secondary Education) 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 93.66 சதவீதம் மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தல் 23.71 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 22.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 13, 2025) காலை வெளியான நிலையில், தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காலையில் வெளியான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று ( மே 13, 2025) வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 88.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 15, 2025 முதல் ஏப்ரல் 4, 2025 வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 16,92,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 14, 96,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024-ல் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 87.98 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் 88.39 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

இன்று (மே 13, 2025) காலை சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 23,71,939 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 22,21,636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மொத்தம் 93.66 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024-ல் 22,38,827 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 20,95,467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதன்படி, 2024-ல் தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.66 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2024 விட 2025-ல் 0.06 சதவீதம்  தேர்ச்சி அதிகரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.