பாதுகாப்பு முக்கியம்.. 8 நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ!
India Pakistan Ceasefire : பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான சேவை 2025 மே 13ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு, லே, அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து
டெல்லி, மே 13 : இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகே விமான சேவை 2025 மே 13ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 8 நகரங்களுக்கு விமான சேவை இண்டிகே, ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வந்தது. இருநாடுகளுக்கு தொடர் தாக்குதலையும், பதிலடியிலும் ஈடுபட்டு வந்தனர். பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் தாக்குதலை நடத்தி வந்தது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வந்தது.
ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை இன்று ரத்து
எனவே, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்திய பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. 2025 மே 10ஆம் தேதி மாலை முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், வட மாநிலங்களுக்கு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும், இந்தியா உஷார் நிலையில் உள்ளன.
இந்த போர் பதற்றத்தில் மத்தியில் இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆதம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிண்டா, பிகானேர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லூதியானா, முந்த்ரா, பாட்டன்கோட், பாட்டன்கோட், நலியா, பதான்கோட், ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், 2025 மே 12ஆம் தேதி திறக்கப்பட்டன.
என்ன காரணம்?
#TravelAdvisory
In view of the latest developments and keeping your safety in mind, flights to and from Jammu, Leh, Jodhpur, Amritsar, Bhuj, Jamnagar, Chandigarh and Rajkot are cancelled for Tuesday, 13th May.We are monitoring the situation and will keep you updated.
For more…
— Air India (@airindia) May 12, 2025
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, விமான நிலையம் திறக்கப்பட்டன. இருப்பினும், சில விமான சேவை பாதுகாப்பு காரணங்களுக்காக 2025 மே 13ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது. அதாவது, ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், “பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 8 நகரங்களின் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். விமான சேவை குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டு இருந்தது. இண்டிகோ கூறுகையில், “உங்கள் பாதுகாப்பை நாங்கள் மிகவும் முன்னுரிமையாகக் கொண்டுகிறோம். பயணிகளின் பாதுகாப்பிற்காக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.