விடிந்தால் கல்யாணம்… சுருண்டு விழுந்து மணப்பெண் உயிரிழப்பு.. ஹல்தி விழாவில் அதிர்ச்சி!

Uttar Pradesh Bride Dies : உத்தர பிரதேச மாநிலத்தில் ஹல்தி விழாவில் மணப்பெண் மயக்கமடைந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹல்தி விழாவுக்கு பிறகு மயக்கடைந்த மணப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

விடிந்தால் கல்யாணம்...  சுருண்டு விழுந்து மணப்பெண் உயிரிழப்பு.. ஹல்தி விழாவில் அதிர்ச்சி!

ஹல்தி விழாவில் மணப்பெண் பலி

Published: 

06 May 2025 06:45 AM

உத்தர பிரதேசம், மே 6 : உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு அடுத்த நாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் ஹல்தி விழாவில் மயங்கம் அடைந்து உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். சமீப காலங்களில சிறார்கள் முதல் இளைஞர்கள் என பலரும் திடீர்   மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஹல்தி விழாவில் அதிர்ச்சி

இருப்பினும், வாழ்க்கை, உணவு பழக்கம், மது அருந்துவது போன்ற காரணங்களால் திடீர் மாரடைப்பு இளைஞர்களிடையே ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இந்த நிலையில், தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி கூறியுள்ளது. அதாவது, ஹல்தி விழாவில் மணப்பெண் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் இஸ்லாம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நூர்பூர் பினானி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நூர்பூர் பினானி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான தீக்ஷா. இவருக்கு மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சவுரப் என்பவருக்கும் 2025 மே 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

மணமகனின் ஊர்வலம் அதே நாளில் மொராதாபாத்திலிருந்து திருமணம் நடைபெறும் இடம் வரை நடைபெற இருந்தது. இதற்காக ஏற்பாடுகளும் கடந்த இரு மாதங்களாக குடும்பத்தினர் செய்து வந்தனர். மேலும், பல உறவினர்களும் கூடி இருந்தனர். இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் ஹல்தி விழா நடைபெற்றது.

மணப்பெண் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

இந்த ஹல்தி விழா வட மாநிலங்களில் விமர்சையாக நடைபெறும். நடனம் ஆடி மணமகன், மணமகள் இருவருக்கும் உடல் முழுவதும் மஞ்சள் பூசி நீரால் குளிக்க வைப்பார்கள். அப்படி தான், சவுரப் மற்றும் தீக்ஷாவுக்கு சடங்குகள் செய்யப்பட்டது. அதன்பிறகு, தீக்ஷழ குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றிருக்கிறார்.

அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், உறவினர் பாத்ரூம் கதவை நீண்ட நேரமாக தட்டிப்பார்த்துள்ளனர். எந்த பதிலும் வராததால், கதவை உடைத்துள்ளனர். அப்போது, திக்ஷா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அடுத்து, பதறிய உறவினர்கள் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இஸ்லாம்நகர் காவல் நிலைய அதிகாரி விஷால் பிரதாப் சிங் கூறுகையில், குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை என்றும் மேலும், பிரேத பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார். அடுத்த நாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.