ரெட்ரோ படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சொன்னது என்ன? கார்த்திக் சுப்பராஜின் நெகிழ்ச்சிப் பதிவு

Rajinikanth Watched Retro: இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ரெட்ரோ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். இது குறித்த செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

ரெட்ரோ படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சொன்னது என்ன? கார்த்திக் சுப்பராஜின் நெகிழ்ச்சிப் பதிவு

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ்

Published: 

06 May 2025 14:25 PM

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா (Suriya) நாயகனாக நடித்திருந்தார். இது சூர்யாவின் 44-வது படம் ஆகும். படத்தின் அறிவிப்பு வீடியோ 2024-ம் ஆண்டு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. மேலும் படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.  படத்தின் அறிமுக வீடியோவில் நடிகர் சூர்யா ரெட்ரோ ஸ்டைலில் இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் படம் 80களில் நடப்பதை காட்டுகிறது என்று யூகித்துவிட்டனர். அதனை தொடர்ந்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைத்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வீடியோவில் நடிகர் சூர்யா நடிகை பூஜா ஹெடேவிடம் அடிதடி எல்லாம் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ பழகுறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்பது மிகவும் அழகாக இருந்தது என்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

படம் சூர்யா ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் சாதாரண சினிமா ரசிகர்களுக்கு டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கருத்து தெரிவித்தனர். படம் ஆக்‌ஷன் படம் அல்ல காதல் படம் என்று படம் வெளியாவதற்கு முன்னதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் காதல் காட்சிகளையும். சூர்யா பூஜா ஹெக்டேவை அந்த அளவிற்கு காதலிக்க ஒரு ஆழமான காரணைத்தையும் காட்ட இயக்குநர் தவறவிட்டுவிட்டார் என்றும் கருத்து தெரிவித்தனர். லவ், லஃப்டர், வார் என்று படத்தின் மூன்று காலங்களை காட்டிய இயக்குநர் எதையும் தெளிவாக காட்டவில்லை என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிக்கு ரெட்ரோ படத்தை திரையிட உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். அதன்படி ரெட்ரோ படத்தைப் பார்த்த ரஜினி என்ன சொன்னார் என்பது குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

அந்த பதிவில் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளதாவது, தலைவர் (ரஜினிகாந்த்) ரெட்ரோ படத்தைப் பார்த்தார், அவருக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு. தலைவரின் (ரஜினிகாந்த்) கூறியதாவது,
முழு குழுவினரின் முயற்சி சிறப்பாக இருந்தது. சூர்யா நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் சூப்பர். லஃப்டர் பார்ட் அருமை. கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ரஜினி கூறியதாகவும் இதனைக் கேட்டு நான் இப்போது பறக்கிறேன். லவ் யூ தலைவா என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார்.