6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா… எந்தப் படத்தில் தெரியுமா?
Vijay Devarakonda - Rashmika Mandanna: தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா
நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda) இறுதியாக தி ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஒரு கூட்டுக் குடும்பத்தை பொறுப்புடன் பார்த்துக்கொள்ளும் நபராக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். ஃபேமிலி செண்டிமெண்ட் படத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸின் கல்கி படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் கிங்டம். மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். ஸபை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்தை இயக்குநர் ராகுல் சாங்க்ரித்யன் இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்தியா கிளிட்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் படத்தின் கதையை கேட்ட உடனே நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்தின் பணிகள் முன்னதாகவே தொடங்கிய நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடித்து வரும் குபேரா மற்றும் தாமா படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஜோடி 2018-ம் ஆண்டு இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்து நடித்தனர். படத்தின் கதை பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும் விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து டியர் காம்ரேட் படத்திலும் நடித்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.