த்ரிஷாவின் பிறந்த நாளிற்கு போட்டோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன தக் லைஃப் படக்குழு

Actress Trisha Krishnan: நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தக் லைஃப் படக்குழுவும் தற்போது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

த்ரிஷாவின் பிறந்த நாளிற்கு போட்டோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன தக் லைஃப் படக்குழு

த்ரிஷா

Published: 

04 May 2025 16:27 PM

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் 6-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நாயகனாக நடித்த படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். முன்னதாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ஐடெண்டிட்டி. இந்தப் படத்திலும் நடிகை த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி இந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நடிகை த்ரிஷாவின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருவது ரசிகர்கள் இடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணி ரத்தினம் படத்தில் தற்போது நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். அடுத்ததாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் தக் லைஃப் ஜூன் மாதம்  5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று மே மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தக் லைஃப் படக்குழு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

மேலும், சூர்யாவுடன் அவரது 45-வது படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிகை த்ரிஷா நடித்த விஸ்வாம்பரா படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதனால் இந்த ஆண்டு மட்டும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் 6 படங்கள் மொத்தம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.