Rashmika Mandanna : தமிழில் பேசணுமா.. குபேரா இந்தி ப்ரோமோஷனின் ராஷ்மிகாவிடம் ரசிகர்கள் கோரிக்கை!

Rashmika Mandanna Speech : பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கும் படம் குபேரா. இப்படத்தின் இந்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று 2025, ஜூன் 10ம் தேதியில் நடந்த நிலையில், அதில் இந்தியில் பேசிய அவரை தமிழில் பேசும்படி ரசிகர்கள் கூச்சலிட்டனர். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Rashmika Mandanna : தமிழில் பேசணுமா.. குபேரா இந்தி ப்ரோமோஷனின் ராஷ்மிகாவிடம் ரசிகர்கள் கோரிக்கை!

ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ்

Updated On: 

10 Jun 2025 21:33 PM

இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekhar Kammula) இயக்கத்தில் தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த குபேராவின் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna)  இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காமினேஷன் இந்த படத்தில்தான் முதன் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் பாலிவுட் நடிகர் ஜிம் ஷார்ப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில், நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்படத்தின் 3வது சிங்கிள் ரிலீஸ் மற்றும் இந்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சி (Hindi Promotion) இன்று 2025, ஜூன் 10ம் தேதியில் மும்பையில் (Mumbai)  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குபேரா படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா, மற்றும் ராஷ்மிகா மந்தனா என அனைவரும் மேடையில் பேசினர். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சி மேடையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார். இந்நிலையில், உடனே அங்கு இருந்த தனுஷின் தமிழ் ரசிகர்கள் அவரை தமிழில் பேசுமாறு கேட்டனர். அதற்கு ராஷ்மிகா பேசிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.

குபேரா ப்ரோமமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ :

ப்ரோமமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ராஷ்மிகா மந்தனாவை மேடையில் பேசுமாறு அழைத்தார். இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ராஷ்மிகா ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பேசினார். தொடர்ந்து இந்தியிலும் பேசத் தொடங்கினார் அவர். உடனே கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் அவரை தமிழில் பேசுமாறு கூறினார்

அதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, “தமிழில் பேசணுமா, இங்கு வந்து தமிழில் பேசினால் எப்படி, இந்தி மீடியாக்கள் இருக்கின்றனர், அவர்களுக்குப் புரியவேண்டும் அல்லவா. எந்த பிரச்சனையும் வேண்டாம் நான் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்” என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருந்தார்.

குபேரா படத்தில் நடித்த கதாபாத்திரம் குறித்து ராஷ்மிகா மந்தனா :

குபேரா படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரத்தைப் பற்றி பேச ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா, அதில் அவர், “நான் எந்தப் படத்தில் நடித்தாலும் எனது நடிப்பை இயக்குநர்களிடம் ஒப்படைத்துவிடுவேன், அவர்கள்தான் எனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒவ்வொரு ரசனைகள் இருக்கும், அந்தவித்தில் குபேரா படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது.

குபேரா படத்தில் நான் நடித்திருக்கும் ரோலை பற்றி முழுமையாகக் கூறமுடியாது, ஏனென்றால் இப்படத்தில் அவ்வளவு அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்று நடிகை ராஷ்மிகா மனிதனா ஓபனாக பேசியிருந்தார்.