Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ் சினிமாவில் அம்மாக்களை கொண்டாடும் படங்களின் லிஸ்ட் இதோ!

Mothers Day Special: இன்று மே மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு உலகம் முழுவதும் அம்மாக்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் மற்றும் மக்கள் என பலரும் தங்களது அம்மாக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அம்மாக்களை கொண்டாடிய படங்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் அம்மாக்களை கொண்டாடும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2025 14:40 PM

உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை உறவுகளை கொண்டாடும் விதமாக பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் (Tamil Cinema) அதிகமாக உறவுகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்கள் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேறபைப் பெற்றிருப்படு குறிப்பிடத்தக்கது. படத்தில் கதை பெரிய அளவில் இல்லை என்றாலும் எதாவது ஒரு செண்டிமெண்டை அந்தப் படம் பேசியிருந்தால் நிச்சயமாக அது வெற்றிப்படமாக மாறிவிடும். குறிப்பாக தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை பாசம், அப்பா – மகள் பாசம், அப்பா – மகன் பாசம் என பல வந்துள்ளது. அதில் அதிகமாக ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்ட செண்டிமெண்ட் என்றால் அது அம்மா – மகன் பாசம் தான். இந்த செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான படம் இதுவரை தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட அம்மா – மகன் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான படங்களில் சிலவற்றை குறித்து தற்போது பார்க்கலாம்…

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ரவி மோகன் நடித்திருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக், சுப்பராஜு என பலர் நடித்திருந்தனர்.

பிரகாஷ் ராஜ் எதிர்பாராத சில காரணங்களுக்காக மனைவி நதியா மற்றும் மகன் ரவி மோகனை விட்டு பிரிந்து செல்கிறார். அதனை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வந்த அம்மா பாட்டும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ராம்: இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ராம். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஜீவா நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிகர்கள் காஜலா, சரண்யா பொன்வண்ணன், ரஹ்மான், சக்தி, பிரதாப் பொத்தன், குணால் சா, இரகுமான், கஞ்சா கறுப்பு, முரளி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பாடலாசிரியர் சிநேகன் எழுதிய ஆராரிராரோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களை கலங்க வைத்தது என்றே கூறலாம்.

வேலையில்லா பட்டதாரி: இயக்குநர் வேல் ராஜ் எழுதி இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. 2014-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் அமலா பால், சமுத்ரகணி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என பலர் நடித்திருந்தனர்.

மூத்த மகனாக எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் நடிகர் தனுஷ் தனது தாய் சரண்யா இறந்த பிறகு முழுவது மாறி விடுகிறார். அதனை தொடர்ந்து அவரது அம்மாவின் நினைவில் வாழ்கிறார். இந்தப் படத்தில் வரும் பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்......
அம்மாவை காணோம்..! தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி தோல்வி
அம்மாவை காணோம்..! தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி தோல்வி...
போர் நிறுத்தம் - இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!
போர் நிறுத்தம் - இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!...
12 ஆண்டுகளை நிறைவு செய்தது அல்போன்சு புத்திரனின் நேரம் படம்...
12 ஆண்டுகளை நிறைவு செய்தது அல்போன்சு புத்திரனின் நேரம் படம்......
திபெத்தில் நிலநடுக்கம்... பீதியில் அலறிய மக்கள்..
திபெத்தில் நிலநடுக்கம்... பீதியில் அலறிய மக்கள்.....
'உழைப்பவருக்கே சீட், சோம்பேரிகள் நிச்சயம் நீக்கம்' – ராமதாஸ்
'உழைப்பவருக்கே சீட், சோம்பேரிகள் நிச்சயம் நீக்கம்' – ராமதாஸ்...
ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..? பிளே ஆஃப் இடம் மாற்றமா?
ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..? பிளே ஆஃப் இடம் மாற்றமா?...
மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை - தானும் விபரீத முடிவு!
மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை - தானும் விபரீத முடிவு!...
திருப்பதி பேருந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
திருப்பதி பேருந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!...
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் யார்?
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் யார்?...