சூர்யவம்சம் 2 படத்தில் இந்த நடிகர் நடிக்க வேண்டும் – இயக்குநர் ராஜகுமாரன்

Surya Vamsam 2 Movie: இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் சூர்யவம்சம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சன் டிவியில் பல பண்டிகைகளுக்கு ஒளிபரப்பானது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் பிறகும் ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யவம்சம் 2 படத்தில் இந்த நடிகர் நடிக்க வேண்டும் - இயக்குநர் ராஜகுமாரன்

சூர்யவம்சம்

Published: 

19 May 2025 07:48 AM

கோலிவுட் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது சூர்யவம்சம் (Surya Vamsam).  இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 1997-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் சரத்குமார் (Actor Sarathkumar) நாயகனாக நடித்திருந்த நிலையில் நடிகை தேவயானி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் தேவயானி, ராதிகா, மணிவண்ணன், பிரியா ராமன், நிழல்கள் ரவி, தாரிணி, அஜய் ரத்னம், ஜெய் கணேஷ், சிவா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரே பாடலில் பெரிய பணக்காரராக ஆக இது என்ன சூர்யவம்சம் படமா என்று தற்போதும் மக்கள் கூறும் அளவிற்கு இந்தப் படத்தின் பாடகள் பிரபமல் ஆனது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் 90களில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் ஹிட் படங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஹிட் அடித்த சூர்யவம்சம் படம் தெலுங்கு, இந்தி, கன்னட ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்துள்ள சரத்குமார் நடிப்பிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்தி இருப்பார். இதில் இவர் பேசும் வசனங்களை தற்போது உள்ள ரசிகர்கள் மீம்ஸ்களாக பதிவிட்டும் வருகின்றனர்.

படம் வெளியாகி சுமார் 28 வருடங்களை கடந்துள்ளது. 25-வது வருடம் கொண்டாடப்படும்போதே படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

அதன்படி அந்தப் பேட்டியில் இயக்குநர் ராஜகுமாரன் தற்போது உள்ள நடிகர்களில் யார் சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதில் சூர்ய வம்சம் படத்தில் தேவயானி மற்றும் சரத்குமார் ஜோடிக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தில் அந்த சக்திவேல் கதாப்பாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.