அபிராமினு பெயர் மாத்த அந்தப் படம் தான் காரணம்… நடிகை ஓபன் டாக்

Actress Abhirami: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் நடிகை அபிராமி தனது பெயர் மாற்ற என்ன காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அபிராமினு பெயர் மாத்த அந்தப் படம் தான் காரணம்... நடிகை ஓபன் டாக்

கமல் ஹாசன், அபிராமி

Updated On: 

19 May 2025 09:28 AM

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் 1983-ம் ஆண்டு பிறந்தார் நடிகை அபிராமி (Actress Abhirami). இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். 1995-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு வரை மலையாளத்தில் நடிகையாக நடித்து வந்தார். பின்னர் தமிழில் 2000-ம் ஆண்டு இயக்குநர் மனோஜ் குமார் இயக்கத்தில் வெளியான வானவில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் நாயகனாகவும் நடிகர் பிர்காஷ் ராஜ் வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மணிவண்ணன், தேவன், லக்‌ஷ்மி, உமா, ரூபா ஸ்ரீ, சாந்தி வில்லியம்ஸ் என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை அபிராமி தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்லின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கமல் ஹாசனின் நாயகியாக நடிகை அபிராமி:

இதில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகை அபிராமி நடித்த விருமாண்டி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனே எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பசுபதி, நெப்போலியன், ரோகிணி, ஷண்முக ராஜன், எஸ்.என்.லக்‌ஷ்மி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்தும் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பாக உன்னவிட பாடல் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இந்தப் பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

நடிகை அபிராமியின் இன்ஸ்டா பதிவு:

தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்த கமல் – அபிராமி ஜோடி:

விருமாண்டி படத்தை தொடர்ந்து தற்போது தக் லைஃப் படத்திற்காக நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் அபிராமி ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை அபிராமி கமல் ஹாசனுக்கு மனைவியாக நடித்துள்ளார். மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், சான்யா மல்கோத்ரா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், வடிவுக்கரசி என பலர் நடித்துள்ளனர்.

அபிராமி என்று பெயர் மாத்த என்ன காரணம்?

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. அப்போது பேசிய நடிகை அபிராமி தனக்கு பெற்றோர்கள் வைத்தப் பெயர் திவ்யா என்றும் நடிகர் கமல் ஹாசனின் குணா படத்தைப் பார்த்த பிறகு தனது பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டதாகவும் அந்த அளவிற்கு நடிகர் கமல் ஹாசனை பிடிக்கும் என்று மேடையில் நெகிழ்ச்சியாக பேசினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.