Lokesh Kanagaraj : படங்களின் ஷூட்டிங்.. அந்த தவறைச் செய்ய மாட்டேன்- லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj About Watch Movies : பிரபல இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் விறுவிறுப்பாகத் தயாராகிவரும் படம் கூலி. இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் படங்களை இயக்க தொடங்கிவிட்டால் அந்த தவறைச் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Lokesh Kanagaraj : படங்களின் ஷூட்டிங்.. அந்த தவறைச் செய்ய மாட்டேன்- லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்

Published: 

11 May 2025 17:28 PM

கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) . இவர் இதுவரை தமிழில் உச்ச பிரபலங்களை வைத்து படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் திரைப்படங்களை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (Lokesh Cinematic Universe) என்ற தொகுப்பில் இயக்கி வருகிறார். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் படங்களைத் தயாரித்தும் மற்றும் கதை எழுதியும் வருகிறார். இவரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கூலி (Coolie). இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்  (Rajiniaknth) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினியின் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் ஷூட்டிங் முடிந்து இப்படமானது இறுதிக்கட்டத்திலிருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர், நான் படங்களை இயக்க தொடங்கிவிட்டால், மற்ற படங்களை எனது படத்தின் ஷூட்டிங் முடியும் வரை பார்க்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “சினிமாவில் தற்போது நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள், மேலும் பல் நல்ல படங்களும் வருகிறது. ஆனால் நான் எனது திரைப்படங்களை இயக்க தொடங்கிவிட்டால், மற்ற புதிய திரைப்படங்களைப் பார்க்கமாட்டேன். ஏனென்றால் அந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தாலும் எனக்குப் பயமாக இருக்கும் மற்றும் நன்றாக இல்லை என்றாலும் எனக்குப் பயமாக இருக்கும். அதன் காரணமாக நான் புதிய படங்களை ஷூட்டிங்கின் போது பார்க்கமாட்டேன்.

அதற்கு பதிலாக எனது தொழிநுட்ப கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் படங்களைப் பார்ப்பார்கள், அவர்கள் அந்த படத்தில் என்ன தவறு நடந்திருக்கும் நாம் எதைச் செய்யக்கூடாது என் என்னிடம் தகவல்களைச் சொல்லுவார்கள். அவர்கள் என்னிடம் வந்து அந்த படத்தில் அந்த கட்சி வந்திருக்கும், அது இப்படி இருக்கும் என்று என்னிடம் கூறுவார்கள். அதுவே எனக்கு பயத்தை ஏற்படுத்தும்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

கூலி திரைப்படத்தின் அறிவிப்பு :

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமானது ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியிலிருந்து வருகிறது. இந்த படமானது ரஜினிகாந்த்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில், பொறுமையாக இறுதிக்கட்ட வேளையில் இருக்கிறது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.