அந்த மூன்று படங்களுக்கு பிறகு தான் ரோலக்ஸ் படம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்
Director Lokesh Kanagaraj: கோலிவுட் சினிமாவில் சமீபத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை அதிகமாக பயண்படுத்தும் இயக்குநர்கள் போல இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அதிகமாக கேங்ஸ்டர் படங்களை தற்போது இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் தொடங்கி தற்போதுவரை தொடர்ந்து கேங்ஸ்டர் படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்களான நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலாநிதிம் மாறன் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள கூலி படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், அவர் அடுத்தடுத்து என்ன படங்களை இயக்க உள்ளார் என்பது குறித்தும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், கைதி படத்தின் இரண்டாம் பாகம் தான் அடுத்ததாக தனது லைன் அப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கைதி படத்திற்கு பிறகு தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமா கொண்டாடத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இரவு முழுவதும் நடக்கும் பல க்ரைம்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் நடிகர் கமல் ஹாசனுக்கு கம்பேக்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கூலி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தின் வேலைகளை தொடங்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் 2, பிறகு விஜய் நடிப்பில் லியோ 2 படங்கள் வரிசையாக உள்ளது என்றும் அதன் பிறகே சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.