Karthik Subbaraj: ரஜினி படத்தில் நடிக்க காரணம் இதுதான்.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்!

Karthik Subbaraj Cameo Role Movie : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படமானது வெளியாகி அருமையான வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் படத்தில் தான் கேமியோ ரோலில் நடித்த காரணம் அடங்கிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

Karthik Subbaraj: ரஜினி படத்தில் நடிக்க காரணம் இதுதான்.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்!

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

17 May 2025 09:00 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) . இவர் கடந்த 2012ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான, பீட்ஸா  (Pizza) படத்தை இயக்கி இயக்குநராகத் தமிழில் அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பைக் கொடுத்து. இதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா (Jigarthanda) திரைப்படத்தை இயக்கி பிரபல இயக்குநராக ஆனார். இவ்வாறு தொடர்ந்து ஆக்ஷ்ன் மற்றும் மாறுபட்ட படங்களை இயக்கி தமிழ் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருந்தார். தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ (Retro) . நடிகர் சூர்யா (Suriya) மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் வெளியான இந்த படமானது எதிர்பார்த்ததை விடமும் அதிகம் வரவேற்பைப் பெற்று வெற்றியாகியிருந்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் கருணாகரன் என பலரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அதில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் இடத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்ததாக கூறியுள்ளார். அது எந்த படம் தெரியுமா? ரஜினியின் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில்தானாம். இந்த விஷயத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜே ஓபனாக கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபனாக கூறிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நானும் ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறேன், தலைவர் ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு காட்சியில் நான் நடித்திருக்கிறேன். அந்த படத்தில் ஒரு இரண்டு காட்சியில் நான் நடித்திருக்கிறேன், சொல்லப்போனால் நான் நடித்த மிகச் சிறிய மற்றும் சிறந்த கேமியோ அந்த பேட்ட படத்தில் மட்டும்தான்.

நான் அந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப் படவில்லை, தலைவரின் படம் ஒரு காட்சியிலாவது இடம்பெறவேண்டும் என்றுதான் நடித்தேன். அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பைக்கில் வில்லனைத் தேடிச் செல்வார், அந்த காட்சியில் நானும் ஒரு பைக்கில் அவரின் பக்கம் செல்வது போல ஒரு காட்சியில் பேட்ட படத்தில் நடித்திருக்கிறேன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் பேசிய வீடியோ ;

 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படமானது எதிர்பாராத வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது. இந்த படமானது முற்றிலும் காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷ்ன் எனத் தனித் தனி பார்ட்டாக அமைந்திருந்தது. இந்த படமானது பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஹிட் படமாகும்.

இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படமானது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கு அடுத்ததாக நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.