Adhik Ravichandran : குட் பேட் அக்லியைத் தொடர்ந்து டோலிவுட் நடிகருடன் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்?
Adhik Ravichandran New Movie : தமிழ் சினிமாவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி ஹிட்டான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் இயக்கத்தில் அஜித்தின் இந்த படம் வெற்றியானதைத் தொடர்ந்து டோலிவுட் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா (Trisha Illana Nayanthara) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருந்தார். இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்புகளைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து சிலம்பரசனின் (Silambarasan) அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பகீரா போன்ற படங்களை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படங்கள் தொடர் தோல்வியைப் பெற்றிருந்தது. மேலும் இவருக்குத் தொடர் தோல்விக்குப் பின் ஹிட் கொடுத்தப் படம் மார்க் ஆண்டனி (Mark Antony).
கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மாறுபட்ட திரைக்கதைகளத்துடன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்துதான் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து அஜித்தின் 64வது படத்தையும் இவரேதான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டோலிவுட் பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் புதிய கதை ஒன்றை கூறியுள்ளாராம் , இந்த படமானது அஜித்தின் 64வது திரைப்படத்திற்கு பின் இயக்கவுள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் உண்மையா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் :
The RED DRAGON has set the box office on fire 🔥🔥
Book your tickets for #GoodBadUgly now!
🎟️ https://t.co/jRftZ6vpJD#BlockbusterGBU pic.twitter.com/4T1g8iTqkt— Mythri Movie Makers (@MythriOfficial) April 24, 2025
நடிகர் அஜித் குமாரின் முன்னணி நடிப்பில் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களும் தொடர்ந்து வெளியாகியிருந்தது.
அஜித்தின் இந்த குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். ஆரம்பத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாதான் நடிக்கவிருந்தாராம். பின் சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர், த்ரிஷா, சிம்ரன் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது உலகளாவிய வசூலில் இதுவரை சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.