மாமன் படத்தில் சிறுவன் செய்த அட்ராசிட்டி… சூரியின் கலகல பேச்சு!

Actor Soori Viral Speech: நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் 5-வது படம் மாமன். இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார், மேலும் நடிகை சுவாசிகா சூரியின் அக்காவாகவும் நடிகர் பாபா பாஸ்கர் சூரியின் மாமாவகவும் நடித்துளார்.

மாமன் படத்தில் சிறுவன் செய்த அட்ராசிட்டி... சூரியின் கலகல பேச்சு!

மாமன்

Published: 

13 May 2025 16:40 PM

நடிகர் சூரியின் (Actor Soori) நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மாமன். சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே மிகவும் சீரியசான கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தார். காமெடியனாக நடிக்கத் தொடங்கிய சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விடுதலை, கொட்டுக்காளி, கருடன், விடுதலை பாகம் இரண்டு என்று இவர் நாயகனாக நடித்த அனைத்துப் படங்களுமே மிகவும் டார்க்கான கதைகளாவே இருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சூரி மிகவும் ஜாலியான படத்தில் நாயகனாக நடிக்க ஆசைப்பட்டு இயக்குநர்களிடம் கதைகளை கேட்கத் தொடங்கியுள்ளார். ஆனால் அவர்களின் கதைகளில் பெரிய அளவில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் நடிகர் சூரி. அதனைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் சூரிக்கு கதை கூறியுள்ளார்.

ஆனால் அந்த கதை முழுவதுமாக பிடிக்காததால் பிரசாந்த் பாண்டியராஜனிடம் நடிகர் சூரி ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை இயக்குநருக்கு பிடித்துப்போக இயக்குநர் அந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். மேலும் முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாகக் கொண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தாய் மாமன் மருமகன் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் சூரியின் அக்கா மகனாக ஒரு சிறுவன் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது அந்த சிறுவனின் சேட்டைகள் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூரியின் எக்ஸ் தள பதிவு:

அப்போது பேசிய சூரி, மாமன் படத்திற்கான பூஜை நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது சூரி சாமிக் கும்பிட்டுள்ளார். அப்போது சூரி கடவுளே என்று பிராத்னை செய்துக்கொண்டிருந்த போது அதற்கு அந்த சிறுவன் அஜித்தே என்று கூறியுள்ளார். அப்படி சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு மீண்டுக் கடவுளே என்று சொல்லும் போது அஜித்தே என்று மீண்டும் கூறியதாகவும் சூரி தெரிவித்திருந்தார்.

படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் படக்குழுவினர் பேட்டிகளும் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.