கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்
Actor Rajinikanth: இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடிகர் ரஜினிகாந்த் தற்போதும் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அதன்படி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வேட்டையன். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் (Manju Warrier), பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா, அபிராமி, கிஷோர், ரித்திகா சிங், அசல் கோலார் என பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்டாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் எல்லா தவறுக்கும் என்கவுண்டர் தீர்வு இல்லை என்பதை இந்தப் படதின் மூலம் இயக்குநர் விளக்கி இருப்பார். மேலும் அரசு திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடி வேலைகள் குறித்தும் இந்தப் படத்தில் பேசியிருப்பார்கள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உடனே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கூலி படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். முன்னதாக வெளியான படத்தில் போலீசாக நடித்த ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அதன்படி தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாகிரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் முன்னதாக வைரலானது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ஷ்ருதி ஹாசனும் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Arangam Adhirattume, Whistle Parakkattume!🔥💥 #CoolieIn100Days ⏳#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/M8tqGkNIrJ
— Sun Pictures (@sunpictures) May 6, 2025
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 100 நாட்கள் தான் இன்னும் உள்ளது என்று படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிக்க வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தளபதி படத்தில் இருந்த தோற்றதில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் வீடியோ இணையத்தில் வைரலானது. படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மட்டும் ரூபாய் 260 முதல் ரூபாய் 280 கோடி வரை சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.