தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?

Watch To Watch: தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் திரையரங்குகளில் தற்போது வரை ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஓடிடியில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?

படங்கள்

Updated On: 

08 May 2025 13:59 PM

குட் பேட் அக்லி: நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இதில் நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபுதேவா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படம் கேங்ஸ்டர் பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குள் ஒரு செண்டிமெண்டை வைத்திருந்தார் இயக்குநர். அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாரின் முந்தைய படங்களின் பல ரெஃபரன்ஸ்ட் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் சாதாரண பார்வையாளர்களுக்கு படம் பெரிய அளவில் பிடிக்கவில்லை. பலர் படம் மிகவும் சுமாராகவே இருந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. எது எப்படியோ படத்தின் வசூல் எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

படம் திரையரங்குகளில் இரண்டு வாரங்களாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் படத்தின் ஓடிடி அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் படம் இன்று 8-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அஸ்திரம்: நடிகர் ஷ்யாம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது அஸ்திரம் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் கோபால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷ்யாம் உடன் இணைந்து நடிகர்கள் நிழல்கள் ரவி, அருள் டி சங்கர், ஜீவா ரவி, ரஞ்சித் டிஎஸ்எம் என பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் படம் இன்று 8-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு முதல் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மரணமாஸ்: நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மரணமாஸ். இயக்குநர் சிவபிரசாத் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் அனிஷ்மா அனில்குமார், ராஜேஷ் மாதவன், பாபு ஆண்டனி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சிஜு சன்னி என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெற்றியடைந்த நிலையில் தற்போது படக்குழு ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதனபடி படம் மே மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.