Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan : திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையா.. நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சொன்ன பதில்!

Actress Trisha Talks About Marriage : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். 40வது வயதைக் கடந்ததும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தக் லைஃப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய த்ரிஷா திருமணத்தில் ஈடுபாடில்லை என்று கூறியுள்ளார்.

Trisha Krishnan : திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையா.. நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சொன்ன பதில்!
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 19 Apr 2025 23:00 PM

தென்னிந்திய முன்னணி கதாநாயகியான த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) தொடர்ந்து படங்களில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இவரின் திருமணம் குறித்தான கேள்விகள் இணையத்தளங்களில் வைரலாகி வந்தது. குறிப்பாக இருவர் பிரபல நடிகர் ஒருவரை நிச்சயம் செய்யவுள்ளார் என்றும் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது. இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற சினிமாவில் முன்னணி கதாநாயகியாகக் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) படம் வெளியானது. நடிகர் அஜித்துடன் (Ajith Kumar) இந்த படத்தில் நடித்திருந்த நிலையில், பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்து சாதனை பிடித்திருந்தது. அதைத் தொடர்ந்து தக் லைஃப் (Thug Life) , சூர்யா 45 (Suriya 45) போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது 40 வயதைக் கடந்த இவரின் திருமணத்தைக் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் அவர் விரைவில் திருமணம் (Marriage)  செய்யவுள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தக் லைப்பை படத்தின் செய்தியாளர்கள் சந்தீப்பில் பேசிய த்ரிஷா திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இந்த விஷயமானது ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதற்கு உடனிருந்த கமல் மற்றும் சிலம்பரசன் கொடுத்த ரியாக்ஷனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா பேசிய வீடியோ :

இந்த வீடியோவில் தொகுப்பாளர் திருமணம் குறித்து த்ரிஷாவிடம் கேட்டிருந்தார். அதற்கு நடிகை த்ரிஷா “எனக்குத் திருமணத்தின் மீது பெரிய ஈடுபாடு இல்லை, கல்யாணம் நடந்தாலும் ஓகே தான் என நடிகை த்ரிஷா தெரிவித்திருந்தார். அதற்கு நடிகர் கமல் ஹாசன் காமெடியாக பேசியிருப்பார். இந்நிலையில், அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் புதிய படங்கள் :

நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, கமலின் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தை அடுத்தாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் முன்னணி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து தெலுங்கில் விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி முன்னணி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் த்ரிஷா, சுமார் 22 வருடங்களுக்கும் மேலாகத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை...
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!...
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!...
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!...
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?...
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!...
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!...
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!...
தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. வெப்பநிலை குறையும் என அறிவிப்பு..
தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. வெப்பநிலை குறையும் என அறிவிப்பு.....
பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.. திருமணத்திற்கு முன் நடந்த சோகம்!
பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.. திருமணத்திற்கு முன் நடந்த சோகம்!...
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?...