Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் தனுஷின் ’இட்லி கடை’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

Idly Kadai Movie: முன்னதாக தேனி மாவட்டம் அனுப்பப்பட்டியில் இட்லி கடை படத்திற்காக போடப்பட்ட இந்த செட்டில் 20 நாட்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு வேறு இடத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த செட்டை பிரிக்காமல் இருந்துள்ளனர். அதில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் ’இட்லி கடை’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
இட்லி கடைImage Source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Apr 2025 06:35 AM

நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கி நடித்து வரும் இட்லி கடை (Idly Kadai) படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். முன்னதாக அவர் நடிப்பு மட்டும் இன்றி பாடல்கள் பாடுவது, பாடல்கள் எழுதுவது, திரைக்கதை எழுதுவது, படங்களை தயாரிப்பது என சினிமாவில் பல வேலைகள் செய்துக்கொண்டிருந்த நிலையில் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இந்தப் படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். இதில் இவருடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், திவ்யதர்ஷினி, பிரசன்னா என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார் நடிகர் தனுஷ். 2024-ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், சரவணன் என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷின் 50-வது படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததுடன் விமர்சகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் குபேரா படம் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இட்லி கடைப் படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், பார்த்திபன், சத்யராஜ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முன்னதாக படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இட்லி கடை படம் குறித்த எக்ஸ் தள பதிவு:

ஆனால் படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கவேண்டும் என்பதால் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில் இட்லி கடைப் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனி ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?...
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!...
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்...
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!...
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!...