Sreeleela : அது தத்தெடுத்த குழந்தை இல்லையா? நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு வைரல்!

Sreeleela Adoption Rumor Clarification : நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் மூலம் உலகளாவிய பிரபலத்தைப் பெற்ற நடிகை ஸ்ரீலீலா. இந்த பிரபலத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் வைரலான நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Sreeleela : அது தத்தெடுத்த குழந்தை இல்லையா? நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு வைரல்!

ஸ்ரீலீலா

Published: 

03 May 2025 17:00 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan)  25வது திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தைக் கோலிவுட் முன்னணி பெண் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கி வருகிறார். இந்த படத்தில் பலமுன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவர் இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீ லீலா வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவு மக்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

அதில் நடிகை ஸ்ரீலீலா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்துள்ளார்  (Adoption A child) என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த தகவலைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீ லீலா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி (Instagram Story) ரசிகர்களின் குழப்பத்தை தெளிவுபடுத்தியுள்ளது . நடிகை ஸ்ரீலீலா அந்த பதிவில் தனது  உடன் இருக்கும் குழந்தை அவரின் “சகோதரியின் மகள்” என்று கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீ லீலா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை ஆரம்பத்தில் வெளியிட்டபோது பலரும் அவர் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்துள்ளார் என்று கூறிவந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகை ஸ்ரீலீலா அது தனது சகோதரியின் மகள் என இன்ஸ்டாகிராமில் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீ லீலா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ஸ்ரீ லீலா குழந்தையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை ஸ்ரீலீலா தனது சகோதரியின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுகிறார். ஐளு… ஐளு… என்று அவர் கொஞ்சி விளையாடும் வீடியோ ரசிகர்கள் மத்திய வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் மூலம் நடிகை ஸ்ரீ லீலா ரசிகர்களின் சந்தேகத்தைத் தீர்த்துள்ளார் .

நடிகை ஸ்ரீ லீலாவின் வைரல் வீடியோ :

இந்த பதிவின் கீழ் நடிகை ஸ்ரீ லீலா, “அவள் எனது சகோதரியின் மகள், எங்கள் வீட்டின் சந்தோசம் அவள். எனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறாள் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தத்தெடுக்கப்பட்டதாகக் கூறிய குழந்தை, நடிகை ஸ்ரீலீலாவின் சகோதரியின் மகள் என்று இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.