சினிமாவில் ரிஸ்க் எடுப்பது அத்தியாவசியம்… நடிகை சமந்தா ஓபன் டாக்!

Actress Samantha Ruth Prabhu: தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா ரூத் பிரபு சினிமா துறையில் ரிஸ்க் எடுப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

சினிமாவில் ரிஸ்க் எடுப்பது அத்தியாவசியம்... நடிகை சமந்தா ஓபன் டாக்!

நடிகை சமந்தா

Published: 

30 Apr 2025 16:11 PM

தமிழில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தெலுங்கில் அதிகமாக பயணிக்கத் தொடங்கினார். பின்னர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு முழுவதுமாக தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் தமிழ் தெலுங்கு என்று மாறி மாறி நடித்து வந்த நடிகை சமந்தா நாக சைத்தன்யா உடனனான விவாகரத்திற்கு பிறகு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். சிகிச்சையின் போது தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்தார். தொடர்ந்து சிகிச்சை புகைப்படங்களை வெளியிடுவது, உடற்பயிற்சி வீடியோ வெளியிடுவது என தொடர்ந்து ரசிகர்களுடன் இணைப்பில் இருந்தார்.

சினிமாவில் இருந்து இரண்டு ஆண்டுகள் விலகி இருந்த நடிகை சமந்தா தற்போது சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது சினிமாவில் நடிப்பது மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இவர் தயாரித்துள்ள படம் சுபம் படம் வருகின்ற மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சினிமாவில் ரிஸ்க் எடுப்பது அத்யாவசியம்:

இந்தப் படத்தை நடிகை சமந்தா தயாரிப்பது மட்டும் இன்றில் இதில் சிறப்புக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, சினிமாவில் ரிஸ்க் எடுக்காமல் அர்த்தமுள்ள மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது, நான் ரிஸ்க் எடுப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும், அந்த ரிஸ்க்குகள் பலனளித்துள்ளன, எனவே 15 வருட கற்றல் மற்றும் ஒரு நடிகராக இருந்த பிறகு, நான் சொல்ல விரும்பும் கதைகளை உறுதியாக நம்புவதற்குத் தேவையான நுண்ணறிவு மற்றும் அனுபவத்தைப் பெற்றுள்ளேன் என்று நான் நம்புகிறேன் என்று சமந்தா ஐஏஎன்எஸ் செய்திக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டா பதிவு:

நடிகை சமந்தா ரூத் பிரபு தனது தயாரிப்பு பேனரான டிரா லா லா மூவிங் பிக்சர்ஸ் பற்றிப் பேசியபோது அது ஒரு அற்புதமான குழுவைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  மேலும் நாங்கள் ஒருவருக்கொருவர் முழுமையாக ஆதரவளிப்போம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மேலும் வேண்டுமென்றே, ஒருபோதும் நடுநிலையாகவோ அல்லது அரை மனதுடன்வோ இல்லாத படைப்புகளை வெளியிட நாங்கள் உறுதி எடுத்துள்ளோம் என்று தென்னிந்தியாவின் பிரபல நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.