Cinema Rewind : சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை… அதற்கான காரணம் இதுதான்.. ஜோதிகா சொன்ன விஷயம்!

Jyothika About Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் ஜோதிகா. பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி படங்களை நடித்து வந்த இவர் அதைத் தொடர்ந்து, தமிழுலும் முன்னணி நாயகியாக நடித்தது வந்தார். இவர் நடிகர் சூர்யாவின் மனைவியும் ஆவார். இந்நிலையில் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் சண்டையே போடுவதில்லை என்று கூறியுள்ளார்.

Cinema Rewind : சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்.. ஜோதிகா சொன்ன விஷயம்!

சூர்யா மற்றும் ஜோதிகா

Published: 

11 May 2025 21:06 PM

நடிகை ஜோதிகா (Jyothika) பாலிவுட் சினிமாவின் மூலமாகத்தான் கதாநாயகியாகவே அறிமுகமாக்கினார். கடந்த 1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா  (Doli Saja Ke Rakhna) என்ற படத்தில் நடித்து ஹீரோயினியாக அறிமுகமாகினார். இந்த படமானது தமிழில் விஜய் – ஷாலினியின் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா தமிழில் வாலி (Vaalee) படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். தனது முதல் படத்திலே அஜித்திற்கு (Ajith) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தமிழில் தனது இரண்டாவது திரைப்படத்தில் சூர்யாவுடன் (Suriya) ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் கேட்டுப்பார்” (Poovellam Kettuppar)  என்ற படம். இந்த படத்தை தொடர்ந்துத்தான் சூர்யா மற்றும் ஜோதிகா ஒருவரையொருவர் தொடங்கினார்கள். இந்த படத்தை அடுத்ததாகப் பல படங்களில் சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடித்திருக்கிறார். ஜோதிகாவுக்கு தமிழில் நீங்காத பிரபலத்தை கொடுத்த படம் என்றால் அது குஷிதான்.  கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

இவ்வாறு நடிகை ஜோதிகா தமிழில் அஜித் முதல் சூர்யா மற்றும் விஜய் வரை பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் இணைந்து நடித்த ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வந்த படம் உடன்பிறப்பே. இந்த படத்தை தொடர்ந்து அவர் பாலிவுட் மற்றும் மலையாள மொழிகளில் படங்களில் நடிக தொடங்கிவிட்டார். இந்நிலையில் முன்னதாக பேசிய நேர்காணலில் நடிகர் சூர்யாவுடன் சண்டை இடுவதைப் பற்றிப் பேசியுள்ளார், அந்த நேர்காணலில் ஜோதிகா பார்க்கலாம்.

நடிகை ஜோதிகா சொன்ன விஷயம் :

முன்னதாக பேசிய அந்த நேர்காணலில் நடிகை ஜோதிகா, “நானும் சூர்யாவும் சண்டை போடுவதே இல்லை. எனக்கும் சூர்யா மீது நிறையக் கோபம் வரும், ஆனால் அவரை பார்த்தும் எல்லாம் பறந்துபோய்விடும். அப்போது ஒரு முறை நான் சூர்யாவிடம் சொல்லிவிட்டேன். உன்னுடைய அழகனா முகத்தை பார்த்தல் எனக்கு வந்த கோபம் கூட பறந்து போகிறது என்று, அவரின் கண்ணில் ஒரு மேஜிக் இருக்கிறது. நான் நிஜமாகவே சொல்கிறேன் நானும் சூர்யாவும் இதுவரைக்கும் பெரிய அளவில் சண்டைகள் போடுவதே இல்லை. நான் இதை எங்குச் சென்றாலும் கூறுவேன்” என நடிகை ஜோதிகா வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

தமிழ்ப் படங்களில் நடிப்பதைத் தவித்தாரா ஜோதிகா ?

நடிகை ஜோதிகா இறுதியாகக் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான உடன்பிறப்பே என்ற படத்தில் சசிகுமாருக்குத் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து அவர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாகத் தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக இவர் மலையாளம் மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் முழுக்க தற்போது மும்பையில் செட்டிலாகிவிட்டார். மேலும் இதனைத் தொடர்ந்து இந்தியில் படங்கள் மற்றும் வெப் தொடர்களை நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.