Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரிலேஷன்ஷிப்பா? இல்ல சிச்சுவேஷன்ஷிப்பா? நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்

டிராகன் படத்தை தொடர்ந்து நடிகை கயாடு லோஹர் தற்போது சிலம்பரசனின் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்க உள்ளார். இவர்களுடன் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் இணைய உள்ளது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ரிலேஷன்ஷிப்பா? இல்ல சிச்சுவேஷன்ஷிப்பா? நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்
நடிகை கயாடு லோஹர்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 May 2025 14:20 PM

டிராகன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2000-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் பிறந்தார் நடிகை கயாடு லோஹர். கன்னடத்தில் 2021-ம் ஆண்டு வெளியான முகில்பேட்டே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் கயாடு லோஹர். அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னாடம், தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்து வருகிறார் கயாடு லோஹர். இதுவரை இவரது நடிப்பில் 6 படங்கள் தான் வெளியாகி இருந்தாலும் டிராகன் படத்தை தொடர்ந்து தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். குறைந்தப் படங்களிலேயே ரசிகர்கள் பலரை பெற்றுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகைகள் அனுபமா பரமேசுவரன், கயாடு லோஹர் மற்றும் இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகை அனுபமா உடனான காதல் ப்ரேக் அப்பிற்கு பிறகு நடிகை கயாடு லோஹரை குடும்பத்தினருடன் பெண் கேட்டு செல்வார்கள் பிரதீப் ரங்கநாதனின் குடும்பத்தினர். அப்போது பிரதீப் மீது காதல் கொள்ளும் நடிகை கயாடு லோஹர் அவரை டேட் செய்து வருகிறார். மேலும், நிச்சயம் முடிந்து திருமணம் வரை செல்கிறது.

ஆனால் வேலை, படிப்பு என பிரதீப் ரங்கநாதன் எல்லாவற்றிலும் பொய் சொல்லியிருப்பதை குற்ற உணர்ச்சி தாங்காமல் திருமணத்தின் போது தாலி கட்டுவதற்கு முன்பு கூறுகிறார். இதானல் அந்த திருமணம் நின்றுவிடுகிறது. இதை தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.

இந்தப் படத்திற்கு பிறகு நடிகை கயாடு லோஹருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவரது பேட்டி தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இன்றைய தலைமுறையினர் வார்த்தைகளையும் பழக்கங்களை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், இன்றைய தலைமுறையினர் புதுப்புது வார்த்தைகளையும் புதுப்புது அர்த்தங்களையும் கூறி வருகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே ஷிப் என்றால் கப்பல்தான். ஆனால் தற்போது ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என்று பல ஷிப்களை கூறி வருகின்றனர். நான் எந்த ஷிப்பிலும் தற்பொது வரை இல்லை. ஏன் என்றால் நான் ரொம்ப நல்ல பொண்ணு. அவ்வளவு சீக்கிரம் எந்த விஷயத்திலும் மாட்டிக் கொள்ள மாட்டேன் என்று கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...